ஆடுகளமா இது?.. சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட இந்தியா… சோயிப் அக்தர் கடும் தாக்கு

ஐசிசி உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று முக்கியமான இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மீது தற்போது குற்றச்சாட்டுகள் திரும்பி இருக்கின்றன. ஆடுகளும் மிகவும் தொய்வாக இருந்ததால் முதல் 10 ஓவருக்கு 80 ரன்கள் அடித்திருந்த இந்திய அணி அதன் பிறகு கடுமையாக தடுமாறி மொத்தமாகவே 240 ரன்கள் தான் அடித்து இருந்தார்கள்.

- Advertisement -

இதனால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தும் இந்திய அணியால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. மேலும் மாலை நேரத்தில் லேசான பனிப்பொழிவு இருந்துதால் ஆடுகளம் பேட்டிங் இருக்கு சாதகமாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்திய அணி தயாரித்த ஆடுகளத்தால் தான் இந்த தோல்வி ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் இறுதி போட்டிக்கு இந்தியா நல்ல ஒரு ஆடு களத்தை தயார் செய்திருக்க வேண்டும். ஆடுகளத்தை சரியான முறையில் இந்தியா தயாரிக்கவில்லை. இறுதி போட்டிக்கு தவறான அணுகுமுறையை கையாண்டு விட்டார்கள்.

ஆடுகளத்தில் கொஞ்சமாவது பவுன்ஸ் இருந்திருக்க வேண்டும். ஆனால் தோய்வான ஆடுகளத்தை இந்தியா தேர்ந்தெடுத்து விட்டது. இதற்கு காரணம் அவருடைய சுழற் பந்துவீச்சாளர்கள் தோய்வான ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். இதன் மூலம் கூடுதல் சாதகம் கிடைக்கும் என இந்தியா நம்பி விட்டது.

- Advertisement -

இந்தியாவின் இந்த அணுகுமுறை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. இதனால் தான் அவர்கள் உலக கோப்பையை வென்று கொண்டே இருக்கிறார்கள். இந்தியா ஒன்றும் அதிர்ஷ்டம் காரணமாக இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை.

அவர்கள் தொடர்ந்து பத்து போட்டிகளில் வென்று இருக்கிறார்கள் என்று சோயிப் அக்தர் இந்திய அணியை பாராட்டியுள்ளார். மும்பை வான்கடே மைதானம் பெங்களூர் சின்னசாமி மைதானம் போன்ற ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் எத்தனையோ உள்ள நிலையில் அகமதாபாத்தில் இப்படி ஒரு ஆடு தளத்தை இந்தியா அமைத்து தோற்றுவிட்டதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles