நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.. இது மட்டும் நடந்தா ரிட்டயர்டு ஆகிவிடுவேன்… ரோகித் சர்மா அதிரடி

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியுற்றாலும், அதற்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் நாங்கள் தான் ராஜா என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மேலும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது எதிர்கால கிரிக்கெட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

பஸ் பால் முறையை கையில் எடுத்ததிலிருந்து இதுவரை தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணிக்கு இந்திய தொடர் மிகவும் ஏமாற்றமானதாக இருந்திருக்கும். தொடர் தொடங்குவதற்கு முன்பு மூன்று அறிமுக ஸ்பின்னர்களை இங்கிலாந்து அணி வைத்திருந்த போதும், அவர்களால் இந்திய பேட்ஸ்மேன்களை தகர்க்க முடியவில்லை. இதனால் பல கனவுகளுடன் வந்த இங்கிலாந்து அணிக்கு இத்தொடர் ஏமாற்றமானதாகவே அமைந்திருக்கும்.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ரோஹித் சர்மா. சமீப காலத்தில் அவரது பேட்டிங் திறனும், மற்றும் அணியை வழிநடத்தும் விதமும் இந்திய அணியை சற்று முன்னோக்கி உயர்த்தி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கிடையில் மும்பை அணியில் இருந்து கேப்டன்சி விடுவிப்பு மற்றும் உலகக்கோப்பை தோல்வி என்று சில சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும் அவற்றை எல்லாம் கடந்து தன்னை நிரூபித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது 37 வயதாகும் ரோஹித் சர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடப் போகிறார் என்பது அனைவராலும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக்கிடம் தனது எதிர்கால திட்டம் குறித்து அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது

“எப்போது எனது ஆட்டம் குறித்து சந்தேகம் இருக்கிறதோ அப்போதே உடனடியாக நான் ஓய்வை அறிவித்து விடுவேன். ஆனால் கடந்த சில வருடங்களில் எனது ஆட்டத்திறனை நன்கு மேம்படுத்தி இருக்கிறேன். தற்போது எனது சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக நான் உணர்கிறேன். பொதுவாக நான் அடிக்கும் ஸ்கோர்களை பற்றி கவலைப்படுவதில்லை.

- Advertisement -

அணியின் நலன் குறித்து அதற்கு என்ன தேவையோ அவற்றை செய்யவே நான் பெரிதும் நினைக்கிறேன். மக்கள் எண்களை பார்ப்பதில்லை. கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. இதில் தனிமனித சாதனைக்கு நான் என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இளம் வீரர்களுக்கு அணியில் சுதந்திரம் வழங்கிடவும், அவர்களுடன் தோழமையுடன் இருப்பதிலேயே நான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது டி20 உலக கோப்பையின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரோகித் சர்மா கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறார். அதற்குப் பிறகு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles