கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ண வேணாமா.. சும்மா பந்து எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்- பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

ஒன்பதாவது டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதன் அரை இறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முக்கியமான சூப்பர் 8 போட்டியில் இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் முக்கியமான 15ஆவது ஓவரில் பந்துவீசி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பார். அதுவே ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்பனையாக அமைந்தது. அதாவது ரிவர்ஸ் ஸ்விங் என்பது பழைய பந்தில் மட்டுமே செய்ய முடியும்.

- Advertisement -

பந்து நன்றாக தேய்ந்தால் மட்டுமே 25வது ஓவருக்கு மேலோ அல்லது 30 வது ஓவரில்தான் பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் போட்டியின் 15 வது ஓவரிலேயே எப்படி அர்ஸ்தீப் சிங்குக்கு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது, இதை நடுவர்கள் கண்காணிக்க வேண்டும். இதுவே பாகிஸ்தானில் யாராவது ஒருவருக்கு இப்படி ஆகி இருந்தால் இது மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கும். எனவே இதனை நடுவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மாவிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது “அதாவது இதை பேசுவதற்கு முன்பாக கொஞ்சமாவது மூளையை பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் வெயில் மைதானங்களில் விளையாடினால், டிரை மைதானங்களில் விளையாடினால் பந்து சீக்கிரத்தில் தேயும். அதனால் ரிவர்ஸ் ஸ்விங் நிச்சயமாக ஆகும். இது எல்லா அணிகளுக்குமே நடைபெறக்கூடிய சாதாரண விஷயம்தான்.

- Advertisement -

இதற்கு மூளையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நாங்கள் இங்கிலாந்திலோ அல்லது ஆஸ்திரேலியா ஆடுகளங்களிலோ விளையாடவில்லை. நன்றாக வெயில் அடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்” என்று ரோகித் சர்மா தனது பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் போட்டி நடைபெறும் கயானா மைதானம் இரண்டு அணிகளுக்கும் சாதகமானது என்றும் அன்றைய நாள் எந்த அணி சிறப்பாக விளையாடியிருக்கிறதோ அதுவே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பந்தை சேதப்படுத்துகிறாரா அர்ஸ்தீப் சிங்.? எப்படி 15வது ஓவர்ல கூட இவருக்கு இப்படி ஆகுது- இன்சமாம் கேள்வி

இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. இதனால் அதற்குப் பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றிபெறும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles