ரிஷப் பண்ட் நம்பர் 3 வரிசையில் களமிறங்க காரணமே இதுதான்.. இந்த ஆடுகளம் குறித்து எங்களுக்கு முன்னரே தெரியும்.. பயிற்சியாளர் பேட்டி

நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் எப்படி தயாரானார்கள் மற்றும் ரிஷப் பண்ட் மூன்றாம் வரிசையில் களமிறங்குவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியின் போது நியூயார்க் ஆடுகளத்தில் பந்து மெதுவாக நின்று வந்தது. இதன் காரணமாகவே இந்திய அணி டாஸ் வென்றவுடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எதிர்பார்த்தது போலவே அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய அணியினரின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

- Advertisement -

16 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி 96 ரன்கள் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய அணியில் ஒரு சில பந்துவீச்சாளரை தவிர மற்ற அனைவரும் விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் அடிக்க, அதற்குப் பின்னர் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் மூன்று பௌண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என 36 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும் அயர்லாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மெக்கர்த்தி வீசிய பந்தில் பண்ட் அடித்த ஸ்கூப் ஷாட் சிக்ஸர் ரசிகர்களிடைய பிரமிக்க வைத்தது. இந்த வெற்றி குறித்து கூறிய இந்திய அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது
“இந்தப் பிட்ச்இரண்டு அணி வீரர்களுக்குமே சவால் ஆனது தான். ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியதால் இது போன்ற ஆடுகளத்தை நாங்கள் திரும்பவும் எதிர்பார்த்தோம்.

- Advertisement -

அதற்கு ஏற்றவாறு நாங்கள் பேட்டிங் ஆர்டரையும் பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்தோம். அதேபோல எங்கள் அணி வீரர்களுக்கு போதிய அனுபவமும் இருப்பதால் லீக் போட்டி வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட் ஆட்டம் பற்றி கூறவேண்டும் என்றால், அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். பயிற்சி ஆட்டத்திலும் அரை சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்த போட்டியிலும் விக்கட்டை பறி கொடுக்காமல் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படிங்க:இதுதான் கடைசி உலக கோப்பைனு யார் சொன்னா.? அவரு இன்னொரு உலக கோப்பையும் விளையாடுவாரு.. ஸ்ரீகாந்த் பேட்டி

இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த சூழ்நிலையில் பன்ட்டு தான் எங்கள் மூன்றாம் வரிசையில் களமிறங்கக்கூடிய கூடிய வீரர். மேலும் அவர் இடது கை ஆட்டக்காரராகவும் இருப்பதால் மூன்றாம் வரிசையில் களமிறங்குவதற்கு அதுவும் மற்றும் ஒரு காரணம்” என்று கூறியிருக்கிறார். இந்திய அணி வருகிற ஒன்பதாம் தேதி பாகிஸ்தான் அணியை இதே மைதானத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles