இதைத்தான் இவ்வளவு நாட்களாக இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்.. இங்கிருந்து என் வாழ்க்கை சிறப்பாக அமையும்.. ரிஷப் பண்ட் நம்பிக்கை

கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து தனது வீட்டிற்கு அதிகாலை சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய கார் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. இதனால் பலத்த காயம் அடைந்த ரிஷப் பண்ட் அருகிலிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

சுமார் எட்டு மாத காலம் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நடக்க ஆரம்பித்தார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது விடாமுயற்சியால் ஐபிஎல்லில் மீண்டும் டெல்லி அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார். தொடக்கத்தில் சில போட்டிகளில் தடுமாறினாலும், அதன் பிறகு தனது வழக்கமான பேட்டிங்கில் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

- Advertisement -

டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும் சிறப்பான வெற்றிகளைக் குவித்தது. ரிஷப் பண்ட் இந்த தொடரில் 400க்கும் அதிகமான ரன்களை குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த அதிரடியை டி20 உலக கோப்பையில் சேர்க்க காரணமாக அமைந்தது.

காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது பற்றி கூறும் ரிஷப் பண்ட்
“இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதைத்தான் நான் இவ்வளவு நாட்களாக இழந்துவிட்டது போல உணர்ந்தேன். இங்கிருந்து எனது பயணம் சிறப்பானதாக அமையும் என்று நினைக்கிறேன். அணி வீரர்களுடன் இணைந்து நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிசப் பண்ட் இடது கை ஆட்டக்காரராக இருப்பது இந்திய அணிக்கு மேலும் சிறப்பம்சமாகும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலை தவிர மற்ற அனைவரும் வலதுகை ஆட்டக்காரர்கள் என்பதால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க, இவரது ஆட்டம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:இந்த சிஎஸ்கே வீரர் தோனி, யுவராஜ் மாதிரி.. எப்படியாச்சும் இவரை பிளேயிங் லெவனில் கொண்டு வாங்க.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம் பிடித்தால் ஆல் ரவுண்டர் சிவம் துபே பிளேயிங் லெவனில் களமிறங்க மாட்டார். இதனால் விக்கெட் கீப்பர் வரிசையில் ரிசப் பண்ட் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பது அணிக்கு சாதகமான நல்ல ஒரு விஷயமாகும். இன்று தனது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles