சிக்சர் அடித்தும் 0 ரன்.. ரிங்கு சிங்கிற்கு நடந்த பரிதாபம்.. ஐசிசி விதியால் வந்த வினை.. என்ன காரணம்?

இந்திய அணிக்கு அடுத்த ஒரு ஸ்டார் வீரர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்திய அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு எந்த ஒரு இடது கை பேட்ஸ்மேன்களும் நடு வரிசையில் சிறப்பாக விளையாடுவதில்லை.

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு இடதுகை பேட்ஸ்மேன் கிடைக்கவே இல்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை நிரூபித்து தற்போது சர்வதேச லெவலுக்கு உயர்ந்திருக்கிறார் ரிங்கு சிங். எப்போதுமே கடைசி பந்தில் ஒரு வீரர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தால், அது அவருடைய நம்பிக்கையை அது பல மடங்கு உயர்த்தும்.

- Advertisement -

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங் கடைசியில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் அடித்த சிக்சர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்தியாவின் வெற்றிக்கு ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது ஷான் அப்பாட் வீசிய பந்தை ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதன் மூலம் சக வீரர்கள் ரிங்கு சிங்கை பாராட்டினார்கள். ஆனால் அப்போதுதான் அந்த டிவிஸ்ட் வந்தது. அப்பாட் வீசிய அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதில் ஐசிசி விதி என்ன சொல்வது என்று தற்போது பார்க்கலாம்.வெற்றிக்கு கடைசியில் ஒரு ரன் தேவைப்படும்போது பவுலர்கள் நோபாலை வீசினால் போட்டி அத்துடன் முடிந்து விடும்.

- Advertisement -

அந்த பந்தில் வீரர்கள் சிக்ஸரோ இல்லை பவுண்டரியோ அடித்து இருந்தாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் சேவாக் சதத்தை தடுக்க ரந்திவ் நோ பால் வீசி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இன்று அரை சதம் அல்லது சதத்தை நெருங்கவில்லை என்றாலும் கடைசி பந்தில் தாம் அடித்த சிக்சர் அவர் கணக்கில் வரவில்லை என்பது சோகத்தை ஏற்படுத்தும். வீடியோவில் நாம் அதை சிக்ஸராக பார்க்கலாம். ஆனால் ரெகார்ட் புக்கில் அது வெறும் நோபால் என்று தான் இருக்கும். எடுத்த சிக்ஸர் ரெக்கார்ட் புக்கில் இருக்காது. இது அவருக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கும். இதனால் இந்த விதியை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles