தரம்சாலாவிற்கு பறந்துள்ள ரிங்கு சிங்.. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறாரா? பரபரப்பு தகவல்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் வரும் ஏழாம் தேதி தொடங்க உள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகரமாக கைப்பற்றி அசத்தியுள்ளது. பஸ்பால் முறையை இந்திய மண்ணில் செயல்படுத்த நினைத்த இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

இந்நிலையில் வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் வரும் 7ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் தற்போது தரம்சாலாவிற்கு சென்றிருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் தற்போது வளரும் வீரரான ரிங்கு சிங் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், உடனடியாக இந்திய அணிக்குள் எடுத்தது. இந்திய அணியிலும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ரிங்கு சிங் வரும் டி20 உலக கோப்பைத் தொடரில் ஃபினிஷர் ஆக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறாரா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இவர் தர்மசாலாவிற்கு சென்றிருப்பது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம்மை சந்திக்கத்தான் என்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதாவது ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், கே.கே.ஆர் அகாடமியில் சேர்ந்து தனது பயிற்சியைத் தொடங்கி இருக்கும் ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் தலைமை பயிர்ச்சியாளர் மெக்கலம்மை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்திய அணியின் பினிசராக தற்போது செயல்பட்டு வரும் ரிங்கு சிங் வரும் டி20 உலக கோப்பையில் இவரது அதிரடியைக் காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரானது, மே மாத இறுதியில் முடிவடையும் நிலையில் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே டி20 உலக கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகிறது. எனவே உலகக்கோப்பை தொடருக்குத் தயாராகுவதற்கு முன்பாக இந்த ஐபிஎல் தொடரை இந்திய வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles