ரோகித் சர்மா ஓய்வு குறித்து வெளியான செய்தி உண்மையா?.. அதுக்கு வாய்ப்பே இல்ல.. வெளியான முழு விபரம்.!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கேப்டனாக இந்திய அணியை இறுதிப்போட்டி வரை தோல்வியே அடையாமல் வழிநடத்தி வந்தவர் கேப்டன் ரோகித் சர்மா. இந்த நிலையில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

- Advertisement -

இதன் மூலம் ரோகித் சர்மா மனமுடைந்து டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றார். இந்த நிலையில் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

பேஸ்புக்கில் பல கணக்குகள் இன்று ரோகித் சர்மா தன்னுடைய ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வந்தனர். ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை. ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. அவர் நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

மேலும் உடல் தகுதியும் சிறப்பான அளவிலே இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்க மாட்டார் என்றும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விராட் கோலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ரோகித் சர்மாவை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாளில் விளையாட பிசிசிஐயின் தேர்வு குழு முடிவு எடுக்கும் என்றும் கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

மேலும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பிறகு வேண்டுமானால் ரோகித் சர்மா தன்னுடைய 38வது வயதில் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்றும் தெரிகிறது.

இதேபோன்று ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles