விராட் கோலி இவர்களுக்கு கிட்ட கூட வர முடியாது.. கவர் டிரைவ் ஷாட்டில் சிறந்தவர்கள் இந்த 2 இங்கிலாந்து வீரர்கள் தான் – ரவி அஷ்வின் பேச்சு

கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஓர் தனிப்பட்ட வீரர் பெயர் போனவராக இருப்பர். ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் என்றால் சச்சின், புல் ஷாட் என்றால் ரிக்கி பாண்டிங் & ரோஹித், ஸ்கூப் ஷாட்டுக்கு டில்ஷன், ஸ்கொயர் கட்டுக்கு ராகுல் டிராவிட் மற்றும் பல தொடரும்.

- Advertisement -

கவர் ட்ரைவ் என்றால் நடப்பில் அனைவர் நியாபகத்துக்கும் வருவது விராட் கோலி தான். ஆஃப் சைடில் அழகிய உடல் வடிவத்துடன் அந்த ஷாட்டை ஆடுவார். இதற்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது எனக் கூறலாம். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும் கவர் டிரைவ் ஷாட்டை அற்புதமாக விளையாடுவார்.

- Advertisement -

அண்மையில் இந்திய மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி ஒன்றில், கவர் டிரைவ் ஷாட் மூலம் தன்னை ஈர்த்த கிரிக்கெட் வீரர் பற்றி கூறியுள்ளார். அவர் இரு வீரர்களைத் தேர்வு செய்தார், அதில் ஒரு இடம் கூட விராட் கோலிக்கு தரவில்லை என்பது சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ரவி அஷ்வின் குறிப்பிட்ட அந்த இரண்டு வீரர்களும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் துவக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரஸ்கோத்திக், மற்றொருவர் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கெல் வாகன் ஆவர். இருவரும் 2000 காலக் கட்டங்களில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய லெஜன்ட் வீரர்கள்.

அஷ்வின், வலது கை கவர் டிரைவ்க்கு மைக்கல் வாகன் மற்றும் இடது கை கவர் டிரைவ்க்கு டிரஸ்கோத்திக் என இரு சைடுக்கும் தனித் தனியாக தேர்வு செய்துள்ளார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் மார்கஸ் டிரஸ்கோத்திக் 76 டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்காக 5825 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்கள் அடங்கும்.

- Advertisement -

அடுத்த வீரர் மைக்கல் வாகனும் இவருக்கு இணையாக 82 டெஸ்ட்டில் 5719 ரன்கள் அடித்துள்ளார். இவர்கள் தவிர இலங்கை வீரர் சங்காகாராவும் மிக அழகாக கவர் டிரைவ் ஆடக் கூடிய வீரர். அதிகபட்ச மக்கள் கவர் டிரைவ் என்றால் சங்காகாரா, கோஹ்லி ஒருவரைக் கூறுவார்கள். அஷ்வின் இவர்கள் இல்லாமல் வேறிருவர்களை தேர்ந்தெடுத்தது சற்று ஆச்சர்யம். இருப்பினும் இது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles