ஒரு உலகக்கோப்பை மாதிரியா நடத்துறீங்க.. அநியாயம் பண்றீங்க ஐசிசி- விளாசும் ரவிச்சந்திரன் அஸ்வின்

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டிகள் பார்ப்பதற்கே சுவாரசியம் இல்லாமல் சலிப்பாகவும் போட்டித் தன்மையில்லாமல் இருக்கிறது என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரை அமெரிக்காவில் பிரபலப்படுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடத்தி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கு பெற்றன. அதில் சிறந்த எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி தற்போது அதற்கு அடுத்த சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறும் நிலையில், அந்த உலகக்கோப்பை தொடரிலும் இதுபோலவே 20 அணிகள் பங்குபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது. இது சிறிய அணிகளுக்கு ஐசிசி வாய்ப்பு கொடுக்கிறது என்று ஒரு நிச்சயமாக கருதினாலும் இது வெறும் கண் துடைப்பு வேலை தான் என்றும், தற்போது நடைபெற்று வரும் டி20 போட்டிகள் பார்ப்பதற்கே சுவாரசியம் இல்லாமல் இருக்கிறது என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்பொழுது ” இந்த உலகக் கோப்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பார்ப்பதற்கே சுவாரசியம் இல்லாமல் இருந்தது. இந்த போட்டியின் 18 வது ஓவரில் ஸ்ட்ரைக்கில் விளையாடிக் கொண்டிருந்த வங்கதேச வீரர் மெகதி ஹாசன் அவுட் ஆகி விடக்கூடாது என்பதற்காக ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கூட பந்தை தட்டி சிங்கிள் எடுக்கிறார்.

சுத்தமாக அங்கு அவர் போராட்ட குணத்தை வெளிப்படுத்தவே இல்லை. இறுதியில் ரியாத் ஹுசைன் மற்றும் வந்து சிறிது நேரம் ஆக்ரோஷத்தை காட்டினார். மற்றபடி இந்த போட்டியை ஆர்வமில்லாமல் பார்ப்பதற்கு சலிப்பாக இருந்தது. இதற்கு ஒரு வழியாக பலமான 10 அணிகளை மட்டுமே வைத்து டி20 உலக கோப்பை தொடரை நடத்தலாம். மேலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் டி20 தொடரை நடத்தினால் அங்கு வந்து விளையாடும் மற்ற அணிகள் இந்த மைதானத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற நேரம் எடுக்கும்.

- Advertisement -

இதற்கு ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடத்தி இருக்கலாம். அதற்கு ஏற்றவாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேரம் தந்திருக்கலாம். மேலும் சிறிய அணிகளுக்கு வாய்ப்பு கொடுக்க ஐசிசி இவ்வாறு செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அமெரிக்க அணிக்கு 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக மற்ற அணிகளுடன் பெரிய போட்டித் தொடர் எதையும் ஏற்பாடு செய்யவில்லை.

இதையும் படிங்க:ஸ்டார்க் இதனால்தான் ரோஹித்கிட்ட மாட்டிகிட்டாரு.. ஆஸ்திரேலியா இன்னொரு பெரிய தப்பு பண்ணிட்டாங்க- பிராட் ஹாக்பேட்டி

ஐசிசி அந்த அணிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தேன், மற்ற அணிகளோடு போட்டித் தொடர் விளையாடுவாய் ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதையும் செய்யாமல் பெரிய தொடர்களில் மட்டுமே இதுபோல செய்வது வெறும் கண் துடைப்பு வேலையாக மட்டுமே தெரிகிறது என்று ஐசிசிஐ ரவிச்சந்திரன் அஸ்வின் விலாசி பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles