இதுல என்ன தப்பு இருக்கு.. தன் நாடு ஜெயிக்கணும்னு அப்படி பண்றான்- ஆதரவாக பேசும் ரவிச்சந்திரன் அஸ்வின்

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கு பெற்ற ஆப்கானிஸ்தான் அணி அப்போதே முன்னணி அணிகளை வீழ்த்தி முக்கிய கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரிலும் மிகச் சிறப்பாக வெற்றிகளை பெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணி முன்னணி அணிகளான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேற முக்கிய காரணம் வங்கதேச அணிக்கு எதிராக சூப்பர் 8 தொடரில் நடைபெற்ற கடைசி போட்டி. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதின் நயீப் காயம் என்று கீழே விழுந்தது இப்போது பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உண்டாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அடைகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி அப்போது பந்து வீசிக் கொண்டிருந்தது.

- Advertisement -

அந்த சமயத்தில் மழை பெய்த போதும் போட்டியை நடுவர் நிறுத்தாமல் இரண்டு அணிகளுமே விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆப்கானிஸ்தான் அணி சில ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆன டிராட் போட்டியை மெதுவாக்கும்படி சிக்னல் கொடுக்க, உடனே ஸ்லிப் பகுதியில் பீல்டிங் நின்று கொண்டிருந்த குல்புதீன் தசைப்பிடிப்பு என்று கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் மழையும் பெய்ய, உடனே நடுவர் போட்டியை நிறுத்தினார். ஆனால் போட்டியை நிறுத்திய சில நிமிடங்களையே மழை பெய்வது நின்று விட மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரரான ஆடம் ஜாம்பா இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நயீபுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “குல்புதின் விழுவதை பார்த்தேன். உடனே மக்கள் அவரை குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

அவர் செய்ததில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை. அவர் தனது நாட்டுக்காக விளையாடுகிறார் கோப்பையை வெல்ல தன்னால் முடிந்தவரை ஏதேனும் செய்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை” என்று அஸ்வின் கூறி இருக்கிறார். இது குறித்து மற்றொரு முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” ஆப்கானிஸ்தான் அணிக்கு பேட்டிங் மட்டுமே தற்போது பிரச்சினையாக உள்ளது.

இதையும் படிங்க:இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணல.. இந்த இந்திய வீரர் தேவையா.? சுனில் கவாஸ்கரின் பதிலடி

ஆப்கானிஸ்தான் அணி குர்பாசை மட்டுமே தற்போது முழுமையாக நம்பி களத்தில் இறங்குகிறது. அவருடைய போட்டி மட்டும்தான் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி தோல்வியை இறுதியாக முடிவு செய்யும். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல டச் தற்போது இருக்கிறது. அவர்கள் அரை இறுதியிலும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையும் இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles