வீடியோ.. 98 ரன்.. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா.. ராகுல் டிராவிட்டின் மகன் அசத்தல் பேட்டிங்.. இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கா.?

வாரிசுகளுக்கு அரசியல், சினிமா மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் அதிக முக்கியத்துவம் உண்டு. தந்தையின் பாதையை வாரிசு தேர்ந்தெடுக்கும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும், கிரிக்கெட்டிலும் அப்படிதான். கிரிக்கெட்டில் பல தந்தை மகன் வாரிசுகள் விளையாடி உள்ளனர். அதில் தந்தையைப் போல தனக்கான இடத்தை சில வாரிசுகள் மட்டுமே தக்க வைத்து உள்ளனர்.

- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடிய தந்தை மற்றும் மகன் வாரிசுகளில் மிகவும் முக்கியமானவர்கள், லாலா அமர்நாத் மற்றும் மொஹிந்தர் அமர்நாத். மொஹிந்தர் தந்தையைப் போலவே வெற்றிகரமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இந்த வரிசையில் மற்றொரு வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுவது விஜய் மஞ்சரேக்கர் மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர். சுனில் கவாஸ்கர் மற்றும் ரோஜர் பின்னின் வாரிசுகளான ரோகன் மற்றும் ஸ்டூவர்ட் இந்திய அணிக்காக விளையாடினாலும் தந்தையைப் போல பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.

- Advertisement -

இந்த வரிசையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களின் முக்கியமானவர், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன். இடதுகை வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன், கிரிக்கெட்டில் தனக்கான இடத்திற்காக போராடிக் கொண்டு வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பையில் கோவா அணிக்காகவும், ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் மகனைப் போலவே, இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புள்ள மற்றொரு வாரிசுகள், சமித் மற்றும் அன்வாய் டிராவிட். இவர்கள் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் மகன்கள் ஆவார். ராகுல் டிராவிட் போலவே அவரது இரு மகன்கள் சமித் மற்றும் அன்வாய் கிரிக்கெட்டையே தேர்ந்தெடுத்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு, ராஜஸ்தான் ராயல் அணிக்கு மென்டராக செயல்பட்டு வந்தார். அதன்பின் இந்திய இளைஞர் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றினார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய இளைஞர் கிரிக்கெட் அணி உலக கோப்பையும் வென்றது. அதைத்தொடர்ந்து என்.சி.ஏ வில் பணியாற்றிய ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

கர்நாடக அண்டர்-19 அணிக்காக ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட்டும், கர்நாடக அண்டர்-14 கேப்டனாக ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வாய் டிராவிட் விளையாடி வருகிறார்கள்.

தற்போது ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட், ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிரான கூச் பெஹார் டிராபி போட்டியில் விளையாடிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமித் டிராவிட் விளையாடுவது அவரது தந்தை ராகுல் டிராவிட் போலவே உள்ளது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் சமித் 98 ரன்கள் எடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் வாரிசுகள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், சமித் டிராவிட் மிகப்பெரிய உச்சம் தொடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமித் டிராவிட், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபில், ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles