2வது டெஸ்ட்டில் ஸ்பின் பிட்ச் வைத்து எங்களை ஜெயிக்க முடியுமென தப்ப கணக்கு போட வேண்டாம்.. இந்தியாவுக்கு தான் அது ஆபத்து – ரச்சின் ரவீந்திரா எச்சரிக்கை

இந்தியா – நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி புனே மைதானத்தில் இன்று துவங்கியது. முதல் போட்டியில் 36 வருடங்களுக்குப் பின்னர் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அசத்தியது.

- Advertisement -

0 – 1 என இந்தியா பின்தங்கிய நிலையில் எப்படியாவது இரண்டாவது டெஸ்ட்டை வென்று சீரிஸை சமன் செய்ய தீவிரமாக உள்ளது. இதற்காக ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து நியூசிலாந்து அணியை அடக்க முடிவெடுத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” முழுக்க முழுக்க சுழலுக்குச் சாதகமான ஆடுகளம் என்றால் அது எங்களுக்கும் சாதகமாகவே இருக்கும். போட்டியின் துவக்கத்தில் கட கடவென 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் நீங்கள் சுலபமாக ஆதிக்கம் செலுத்தலாம். ஒரு அணியாக, எந்த பிட்ச் கொடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை எங்களால் மாற்ற இயலாது. “

- Advertisement -

” ஆனால் போட்டியில் எங்களது அணுகுமுறையை பிட்சுக்கு ஏற்றவாரு மாற்றிக் கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் அதைச் சவாலாக நாங்கள் எதிர்கொள்வோம். ” எனத் தைரியமாக பேசியுள்ளார் ரச்சின் ரவீந்திரா. ஸ்பின் ஆடுகளம் குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் மற்றும் ஆல்ரவுண்டர் டாரில் மிட்செல் இருவரும் இதையேக் கூறியுள்ளார்கள்.

முதல் டெஸ்ட் போட்டியில் அமர்க்களமான சதம் விளாசியதோடு இரண்டாவது இன்னிங்சில் அணியை வெற்றி எல்லைக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருது பெற்றார் ரச்சின் ரவீந்திரா. தன்னுடைய அதே ஃபார்மில் மீண்டும் அணிக்கு அங்கமாக அவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சுழலிலும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

புனே மைதானம் சுழலுக்குச் சாதகமான பிட்ச் என்பதால் முதல் இன்னிங்சில் முதலே ஸ்பின் ஆகும் என கூறப்பட்டுள்ளது. அஷ்வின், ஜடேஜா, வாசிங்டன் சுந்தர் மூவரும் இணைந்து இதனைச் சுலபமாக செய்வர். அதனைத் தாண்டி எப்படியாவது தொடரை வெல்லும் நோக்கில் நியூசிலாந்து போராடும். மொத்தத்தில் விறுவிறுப்பான டெஸ்ட் காத்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles