விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல.. இதுலயும் கிங் நம்பர் ஒன்.. பாகிஸ்தான் பார்த்து கத்துக்கணும்.. ஹபீஸ் பேட்டி

நவீன கிரிக்கெட்டின் பிதாமகனாக தற்போது இந்தியாவின் விராட் கோலி வளம் வந்து கொண்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

- Advertisement -

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 26 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை அடித்துள்ள விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒட்டுமொத்தமாக 80 சதங்களையும் 50+ பேட்டிங் ஆவரேஜில் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அதேபோல ஐபிஎல் தொடரிலும் எண்ணற்ற சாதனைகளை வைத்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் கூட அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும் இவரை பெற்றார். விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் தற்போது ஃபீல்டிங்கிலும் நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். 35 வயதான கோலிக்கு பீல்டிங்கில் அவர் வேகம் இன்னும் குறையவில்லை.

- Advertisement -

ஃபீல்டிங்கை பொறுத்த வரை விராட் கோலி சிறுத்தையை விட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக திகழ்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல ஃபிட்னஸிலும் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்.

இவரைப் பாகிஸ்தான் அணி பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் இது குறித்து முகமது ஹபீஸ் விரிவாக கூறும்போது
“விராட் கோலி பற்றி ஒரு சிறிய விஷயத்தை நான் கூற வேண்டும். விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபிட்னஸிலும் தனக்கென ஒரு தரத்தை உருவாக்கியுள்ளார். அதனாலேயே அவருக்கான மாற்றம் என்பது எளிதாக தெரிகிறது. நீங்கள் எவ்வளவுதான் அழுத்தம் போட்டாலும் அதை உள்வாங்கி விராட் கோலி பிட்டாக இருக்கிறார். பாகிஸ்தான் அணி இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

10 வருடங்களுக்குப் பின்னால் விராட் கோலியை விட பிட்டாக இருக்கும் வீரரை என்னிடம் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிட்னஸ் இல் விராட் கோலி மட்டுமே நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். அவர் தன்னை மாற்றிக் கொண்ட விதத்தை வைத்து ஒருவர் தனது தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் எனக்கு யோ யோ டெஸ்டில் 17 மதிப்பெண்களுக்கு பதிலாக 16 மதிப்பெண்கள் வந்தால் கவலை இல்லை என்று கூறுவார்.

இதையும் படிங்க:காயத்தால் வெளியேறிய ரோகித் சர்மா.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா.? வெளியான அப்டேட்

என்னுடைய கொழுப்பின் அளவு 100லிருந்து 60% வந்தாலும் கவலை இல்லை. ஏனென்றால் நான் 70 சதங்கள் அடித்துள்ளேன் என்று கூறுவார். ஆனாலும் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு தான் ஒரு சிறந்த மரபை உருவாக்க வேண்டும் எனவும் கூறுவார். அவரது இந்தத் தரத்தின் காரணமாகவே விராட் கோலி சர்வேச கிரிக்கெட்டில் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles