ஒரு சின்ன பையன் என்னா திமிரா எங்க நாட்டுக்கே வந்து ஸ்டார்க்கை கலாய்ப்பான்.. 2வது டெஸ்டில் இத செஞ்சி ஆஸ்திரேலியா யாருனு காட்டணும் – ஜான்சன் பேட்டி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதீத ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. ரோஹித் ஷர்மா இல்லாத பட்சத்தில் புதிய கேப்டனாக பும்ரா சிறப்பாக தலைமைத் தாங்கினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா என்றாலே நக்கல் நிறைந்த அணி தான். அதுவும் பார்டர் கவாஸ்கர் டிராபி என்றால் கூடுதலாக ஸ்லெட்ஜிங் செய்து பரபரப்பான தொடராக மாற்றுவார்கள். அந்த வகையில் முதல் டெஸ்ட்டில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை கலாய்தது மிகவும் வைரலானது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அமர்க்களமாக இருந்தது. இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனதற்கு சேர்த்து 2வது இன்னிங்சில் ஈடு கட்டினார். 161 ரன்கள் விளாசி பார்டர் கவாஸ்கர் டிராபியில் அடுத்தத் தலைமுறையின் வருகையை பலமாக அறிவித்தார்.

- Advertisement -

அவரின் இந்த ஆட்டத்தில் இடையே மிட்செல் ஸ்டார் பந்துவீசும் போது அவரிடம், ” பந்து மிகவும் மெதுவாக வருகிறது. சற்று வேகமாக வீசு ” என ஸ்லெட்ஜிங் செய்தார். பேட்டிங்கில் நல்ல வேகத்தில் இருந்த ஜெய்ஸ்வால் அவர் பேசியதற்கு இணையாக ஸ்டார்க்கை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆடினார்.

இது பற்றி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, ” இந்த ஆஸ்திரேலியா அணியிடம் இருந்து நான் சில சண்டைகளை எதிர்பார்க்கிறேன். ஒரு இளம் அறிமுக வீரர் எங்களது நாட்டிற்க்கு வந்து ஸ்டார்க்கைப் பார்த்து வேகம் பத்தவில்லை எனக் கூறுகிறார் பாருங்கள். “

- Advertisement -

” பார்டர் கவாஸ்கர் டிராபியில் இன்னும் நிறைய நேரம் உள்ளது. ஆஸ்திரேலியா வீரர்கள் அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆரம்பத்திலேயே இந்திய அணியின் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டும் இல்லையெனில் கஷ்டம். ” எனக் கூறினார் மிட்செல் ஜான்சன்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles