கேப்டனாக நான் கற்றுக் கொண்டது இதைத்தான்.. அப்போதுதான் அனைத்திற்கும் உங்களால் தீர்வு காண முடியும்.. ரோகித் சர்மா பேட்டி

ஜூன் மாதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் ஒரு குழு முன்னதாக அமெரிக்கா கிளம்பி தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

பயிற்சி போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கேப்டன்சி குறித்தும், இந்திய வீரர்கள் குறித்தும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு கேப்டனாக தான் கற்றுக் கொண்டவற்றையும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிவதற்கு முன்பாகவே பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறிய அணிகளின் இந்திய வீரர்கள் டி20 உலக கோப்பை தயாராகும் விதமாக முன்னதாகவே அமெரிக்கா புறப்பட்டனர். அந்த குழுவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகிய வீரர்கள் அடங்கிய குழு இருந்தது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மட்டும் லண்டனில் இருப்பதால் அவர் நேரடியாக அமெரிக்காவில் இந்திய அணியுடன் இணைந்து கொண்டார். விராட் கோலி சில ஆவணங்கள் சரி பார்க்க வேண்டி இருப்பதால் அவர் மட்டும் இந்திய அணியில் இணையவில்லை. இன்னும் ஒரு நாட்களில் அவரும் இணைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணி முதல் பயிற்சி போட்டிக்கு முன்பாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது
“ஒரு கேப்டனாக அணியில் உள்ள பல வீரர்களையும் ஒரே மாதிரி சமாளிப்பது பெரிய விஷயமாகும். ஒரு கேப்டனாக நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அப்போதுதான் அவர்கள் அணியின் ஒரு பகுதியாக உணர்வார்கள். மேலும் எந்த ஒரு வீரரும் பிரச்சனை என்று உங்களிடம் வரும்போது அதற்கு சரியான தீர்வு உங்களிடம் இருக்க வேண்டும். ஒரு கேப்டனாகவும் அதே சமயத்தில் ஒரு வீரராகவும் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும். மேலும் ஒரு போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தின் தன்மை, எதிர் அணியின் திட்டம் ஆகியவை குறித்து அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்காக நான் நீண்ட நேரம் செலவிடுகிறேன்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைக்க போகும் நான்கு வீரர்கள்.. ஒரே ஒரு வெளிநாட்டு வீரருக்கு மட்டுமே இடம்.. முழு விபரம்

மேலும் டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் அணுகுமுறைகள் வித்தியாசமாக இருப்பதால் இது சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது. எனவே நீங்கள் இதற்கும் தயாராக இருந்து சரியான தகவல்களை வீரர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார். இந்திய அணி வருகிற ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles