இந்தியாவுக்கு அதிக வாய்ப்புனு யார் சொன்னா.. எனக்கு இப்போ இதை நினைச்சா மட்டும்தான் பயமா இருக்கு- இந்திய கேப்டன் ரோஹித் பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டி கயானா மைதானத்தில் இன்று இரவு நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தயாராகி வரும் வேளையில், இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தற்போது அரையிறுதி போட்டிகள் இன்று முதல் நடைபெற இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரை இறுதி போட்டி டிரினினாட் மைதானத்திலும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி காயனா மைதானத்திலும் நடைபெற உள்ளது.

- Advertisement -

ஏனென்றால் முதல் அரை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குவதால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த நாள் ஒளிபரப்பு வணிகம் பாதிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணி மோதும் போட்டியை இரவு நேரத்தில் விளையாடுமாறு மாற்றி அமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் மற்ற அணிகளை விட அரை இறுதி போட்டி எங்கு விளையாடப் போகிறோம் என்பது இந்தியாவிற்கு முதலிலேயே தெரிந்து விட்டதாக மார்க் பட்சர் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற பேட்டியில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரோகித் சர்மா இது குறித்து கேட்கப்பட்ட போது கயானாவில் விளையாடதை தான் சாதகமாக நினைக்கவில்லை என்றும், அந்த நாளில் நல்ல கிரிக்கெட் விளையாடும் அணியே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து ரோகித் சர்மா விரிவாக கூறும்பொழுது “மழை என்பது இயற்கை காரணி என்பதால் அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

- Advertisement -

ஒருவேளை போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை இழக்க வேண்டி வரும் என்பது மட்டுமே தற்போது என்னுடைய ஒரே கவலையாக உள்ளது. இருப்பினும் எங்களை அடுத்த போட்டிக்கு கூட்டி செல்ல வேண்டிய பொறுப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொறுப்பு. தற்போது இந்த போட்டியில் எப்படி விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:அநியாயம்.. ஆப்கான் தோற்க முழு காரணம் இந்தியாதான்.. வாகன் பகிரங்க குற்றச்சாட்டு

கயானாவில் போட்டி நடைபெறுவதை நான் சாதகமாக நினைக்கவில்லை. ஏனெனில் இங்கு இங்கிலாந்து அணியும் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறது. இதனால் இரண்டு அணிகளுக்குமே ஒரே வாய்ப்பாக நான் பார்க்கிறேன். அன்றைய நாளில் நல்ல கிரிக்கெட் விளையாடும் அணி எந்த அணிக்கே அதிக வெற்றி பெற வாய்ப்பு ஆகும். இதனால் வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles