என்னடா பவுலிங் இது.. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் குறை சொன்ன புதிய கோச் மார்னே மார்க்கல்.. நக்கலாக பதில் சொன்ன பாண்டியா !

2024 டி20ஐ உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவடைந்தது. அவரைத் தொடர்ந்து தற்போது கௌதம் கம்பீர் புதிய பொறுப்பைக் கையில் எடுத்துள்ளார். இவரின் பரிந்துரையில் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் தென்னாபிரிக்கா பந்துவீச்சாளர் மார்னே மார்க்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் தொடர் 2-0 என இந்திய அணி வெல்ல அடுத்தாக டி20ஐ தொடரில் மோதுகிறது வங்கதேசம் அணி. இந்தத் தொடர் அக்டோபர் 6 முதல் துவங்குகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்த ஹார்த்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

- Advertisement -

பாண்டியா தீவிரமான பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவரின் பந்துவீச்சு புதிய பயிற்சியாளர் மார்க்கல் சுத்தமாக ஈர்க்கவில்லை எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. பயிற்சியில் ஹர்திக் பாண்டியா ஸ்டெம்ப்பை ஒட்டிய படியே பந்துகளைத் தொடர்ந்து வீசியதைப் பார்த்த மார்னே மார்க்கல் திருப்தியாக இல்லை.

- Advertisement -

பந்தை ரிலீஸ் செய்யும் இடம் தவறாக இருப்பதாக, அவரின் பந்துவீச்சில் இன்னும் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது மார்க்கல் நினைக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா அவரிடம், இதுதான் தன்னுடைய ஸ்டைல் என அவரிடம் கூறி, மார்க்கல் எதுவும் பேசாமல் நடையைக் கட்டினார். சில நேரம் கழித்து, பான்டியாவை உற்று கவனித்து பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்து வந்தார் மார்க்கல்.

ஹார்திக் பாண்டியா வெள்ளைப் பந்திலேயே இன்னும் சரியான நிலைக்கு வரவில்லை என பயிற்சியாளர் கருத்தில் வேளையில், இரு மாதங்கள் முன்பு ஹர்திக் பாண்டியா சிகப்பு நிறப் பந்தை வைத்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களைப் பார்த்து பல்வேறு செய்திகளை சமூக வலைத்தளத்தில் பரப்பினர். கம்பீரின் புதிய திட்டமாக ஹர்திக் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக ரசிகர்கள் பேசிக் கொண்டனர். அதனை உண்மை அது அல்ல என பார்த்திவ் பட்டேல் மற்றும் தினேஷ் அன்றே மறுத்தனர்.

- Advertisement -

அன்று பயிற்சியின் போது வெள்ளைப் பந்து பற்றாக்குறை காரணமாகத் தான் ஹர்திக் பாண்டியா சிவப்புப் பந்தை பயன்படுத்தினார் என பார்த்திவ் பட்டேல் கூறினார். ஹார்திக் பாண்டியாவின் உடல் தகுதி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைக்காது, அதனால் அவரை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் எதிர்பார்க்காதீர்கள் என தினேஷ் கார்த்திக் பேசினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles