ஜெயிக்கனும்னா.. அடுத்த மேட்ச் இந்த 2 மாற்றத்தை செய்ங்க.. இந்தியா அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை

சவுத் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, டி20 தொடரை சமனிலும், ஒரு நாள் போட்டி தொடரை வென்ற நிலையில், டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தவிர மற்ற மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சவுத் ஆப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த டீன் எல்கர்க்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை இந்திய பந்துவீச்சாளர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

- Advertisement -

வருகிற ஜனவரி 3ஆம் தேதி தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இரண்டு மாற்றங்களை செய்தே தீர வேண்டும். மாற்றங்களை செய்தால் மட்டுமே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டி தொடரை சமநிலையில் முடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாளில் முடிவடைந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளையிங் லெவன் தேர்வு செய்து பேசிய சுனில் கவாஸ்கர், “உடல்தகுதி காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா, தற்போது நல்ல நிலையில் இருப்பார் என எதிர்பார்க்கிறேன், எனவே அவர் அணியில் இடம் பெறுவார். ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதால், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக தேர்வு செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஏமாற்றிய நிலையில், அவருக்கு பதிலாக ஜடஜாவை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

கஃபே டவுன் மைதானம் முதல் டெஸ்ட் போட்டியை போலவே,
வேக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறுவதால், அவரது பேட்டிங் இந்திய அணிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும், மேலும் அவரது சுழற்பந்து வீச்சு, ரவிச்சந்திரன் அஸ்வினை விட சற்று வேகமாக இருப்பதால், கண்டிப்பாக பந்துவீச்சில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட முகேஷ் குமார் அணியில் இடம் பெற்றால் இந்திய அணியின் பந்துவீச்சு மேலும் வலுபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1992ஆம் ஆண்டு முதல், 30 ஆண்டுகளாக சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரை விளையாடி வரும் இந்திய அணி, சவுத் ஆப்பிரிக்கா மண்ணில், டெஸ்ட் போட்டி தொடரை வெற்றி பெறாத நிலையில், இந்தமுறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே கிடைத்துள்ளது.

சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரை, 7 இந்திய கேப்டன்கள் தலைமையில் விளையாடி உள்ள நிலையில், எம்.எஸ் தோனி மட்டுமே 2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி தொடரை இழக்காமல் சமநிலையில் முடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டி தொடரை 1-1 என சமநிலையில் முடித்தால், எம்.எஸ் தோனிக்கு பிறகு, டெஸ்ட் தொடரை சமநிலையில் முடித்த கேப்டன் என்ற சிறப்பை ரோகித் சர்மா அடைவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles