இறுதிப் போட்டியிலும் அச்சுறுத்தும் மழை.. ஆட்டம் ரத்தனால் கோப்பை யாருக்கு.? என்ன சொல்கிறது ஐசிஐசி விதிமுறை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி பார்படாஸ் நகரில் கேன்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெற உள்ள ஒரு போட்டியே 2024 டி20 உலக சாம்பியன் யார் என்பதை அறிவிக்கப் போகிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது வெற்றிகரமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை டி20 வரலாற்றிலேயே தென்ஆப்பிரிக்கா முதல்முறையாக இவரது தலைமையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதனால் இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதுவே மறுமுனையில் பார்த்தால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தற்போது கம்பீரமாக இறுதி போட்டியில் விளையாட உள்ளது. கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது.

அதன் பிறகு கடந்த 10 வருடங்களாக இந்திய அணியும் இதுவரை எந்த ஐசிசி டிராபியையும் வென்றதில்லை.இந்த நிலையில் கோப்பையை கைப்பற்ற இரண்டு அணிகளும் போராடும் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும் இந்தப் போட்டியில் இந்த இரண்டு அணிகளோடு சேர்த்து மழையும் ஜோடி சேர்ந்து விளையாட தயாராகி இருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் போட்டியில் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதில் உள்ளூர் நேரப்படி காலை 11:00 மணி முதல் 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரை இறுதி போட்டி போலவே இந்த போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே ரிசர்வ் டே அறிவித்திருக்கிறது. அதாவது நாளை நடைபெற இருக்கும் போட்டியில் மழை பெய்தால் போட்டியை பத்து ஓவராக குறைக்க ஐசிசி முயற்சி செய்யும். இருப்பினும் அதையும் தாண்டி மழை பெய்தால் ரிசர்வ் டே என அறிவிக்கப்பட்டு அடுத்த நாள் போட்டி நடைபெறும்.

இதையும் படிங்க:ஒட்டுமொத்தமாக சரணடைந்த நாசர் ஹுசைன்.. கொஞ்ச நஞ்ச பேச்சாயா பேசுன.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

ஆனால் அந்த நாளிலும் மழை பெய்தால் பத்து ஓவர்களாக திரும்பவும் குறைக்கப்பட்டு போட்டியை முடிக்க முயற்சி செய்யப்படும். இருப்பினும் அதையும் மீறி மழை பெய்தால் இரண்டு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மழை பெய்த காரணத்தினால் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கோப்பையை பகிர்ந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles