ராகுல் டிராவிட்டுக்கு எதிரான குணம் கொண்டவர் கம்பீர்.. இந்த ஒரு குறை உள்ளது – புதிய பயிற்சியாளர் பற்றி ரிஷப் பண்ட் ஓப்பன் டாக்

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை கைபற்றி 10 ஆண்டு கால கோப்பை பசியைத் தீர்த்தது. இத்துடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

- Advertisement -

ஜூலை மாதம் முதல் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. கம்பீரின் பயிற்சியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான புதிய இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் டி20 தொடரை இலங்கை அணிக்கு எதிராக வென்று அதிரடியாக துவங்கியது.

- Advertisement -

இருப்பினும் சீனியர் வீரர்கள் இருந்தும் அடுத்ததாக நடந்த ஒருநாள் தொடரை மோசமாக விளையாடி 2 – 0 கணக்கில் தோற்றது. என்னதான் இதனை வைத்து கம்பீரை சமூக வலைத்தளத்தில் சிலர் கேலி செய்தாலும் அவரின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இன்னுமும் உள்ளது. அண்மையில் புதிய பயிற்சியாளர் கம்பீர் பற்றியும் அவரின் பயிற்சி ஸ்டைல் பற்றியும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

- Advertisement -

கார் விபத்தில் இருந்து மீண்டு ஒரு வருடம் ஓய்வு பெற்றப் பிறகு கடந்த ஐ.பி.எல் தொடரில் பண்ட் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து உடனே டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடினார். தற்போது துலீப் டிராபியில் விளையாடி வருகிறார். இளம் இந்திய வீரர்கள் நான்கு அணிகளாக பிரிந்து மோதுகின்றனர். இந்தத் தொடரை அடிப்படையாக வைத்து தான் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வும் செய்யவுள்ளனர். விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் திரும்பவுள்ளார்.

புதிய கோச் குறித்து ரிஷப் பண்ட், “ ராகுல் பாய் ஒரு பயிற்சியாளராகவும் ஒரு நல்ல மனிதனாகவும் சமநிலையை கடைப்பிடிப்பார். அதில் நல்லது, கேட்டது என இரண்டும் அடங்கும். ஆனால் கௌதம் கம்பீரோ அதற்கு நேர் எதிரானவர். அவர், என ஆனாலும் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலையைக் கொண்டவர். ஒன்சைட் மனிதராகத் தான் அவரைப் பார்க்கிறேன். ” என்றார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சொன்னது போல கம்பீர் வெற்றிப் பசிக் கொண்ட ஆக்ரோஷமான வீரராகவும் பயிற்சியாளராகவும் விளங்குவது அனைவர் அறிந்தது. இதனை அஸ்வினின் யூட்யூப் சேனலில் கூட அவர் கூறியுள்ளார். அவரின் இந்த குணம் அண்மையில் கூட கொல்கத்தா அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளது. அதே பாணியில் இந்திய அணியும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles