அந்த 16 வயது ஹர்த்திக் பாண்டியா தந்த ஊக்கம்தான் என்னை பிரச்சினையில் இருந்து வெளியே வர உதவியிருக்கிறது.. ஹர்திக் பாண்டியா பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா, வங்காளதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் பாண்டியாவின் பேட்டிங் நம்பிக்கைகுறிய வகையில் அமைந்திருந்தது.

- Advertisement -

சமீபகாலமாக பார்ம் அவுட்டில் இருந்த பாண்டியா அதிலிருந்து எப்படி வெளியே வந்தார்? என்பதை அவரே மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவை பொருத்தவரை இந்திய ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக அவர் விளையாடிய போது அவருக்கு பொன்னான காலமாக இருந்தது என்றே கூறலாம். குஜராத் அணியில் ஆல் ரவுண்டர் தேவையை அறிந்த பாண்டியா ஒரு கேப்டனாக மிடில் ஆர்டரில் களமிறங்கி பொறுப்பாக விளையாடுவதிலும், இக்கட்டான சூழ்நிலைகளில் பந்துவீசி விக்கெட்டுகளை பெற்றுக் கொடுப்பதிலும் ஒரு கேப்டனாக குஜராத் அணிக்கு சிறப்பாக பங்காற்றினார்.

- Advertisement -

அவரது தலைமையிலேயே 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் 2023 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசத்தியது. அங்கிருந்து இந்த சீசனில் மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அவருடைய முயற்சிகள் எதுவும் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டிலுமே மிக மோசமாகவே செயல்பட்டார்.

மேலும் அணியும் ஒத்துழைப்பு தர மறுக்கவே, மும்பை அணி இந்த சீசனில் மிக மோசமாக தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பெற்றது. மேலும் இவருக்கு தனிப்பட்ட பிரச்சனைகளின் மூலமும் மனம் உடைந்திருந்த பாண்டியா வங்காளதேசம் டி20 பயிற்சி போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்தார். இந்த மோசமான சூழ்நிலைகளில் இருந்து தான் மீண்டு வந்த விதம் குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது
“16 வயதில் இருந்த ஹர்திக் பாண்டியாவை விட 30 வயதில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எல்லாமே எளிமையாக கிடைக்கும். இதனால் நான் 16 வயதில் இருந்த ஹர்திக் பாண்டியாவிடம் திரும்பிச் சென்றேன். அவரிடம் நான் சென்று இப்படியான கடினமான காலகட்டங்களில் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டீர்கள் எப்படி செய்தீர்கள் என்று கேட்டேன்.

இதையும் படிங்க:நான் தோனி பாய் குறித்து எதுவும் தவறாக கூறவில்லை.. வேண்டுமென்றே சிலர் தவறாக பரப்பி வருகின்றனர்.. நிதீஷ் குமார் ரெட்டி விளக்கம்

அந்த சமயத்தில் எனக்கான வசதிகளோ, வாய்ப்புகளோ என்பது எதுவும் கிடையாது. இப்போது நான் அந்த 16 வயது ஹர்திக் பாண்டியா மோடில் தான் இருக்கிறேன். ஏனெனில் அவர்தான் என்னுடைய சரியான வழிகாட்டி. அவர் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் கண்டிப்பாக இருந்திருக்க மாட்டேன். இறுதியாக என்ன நடந்தாலும் நாம் நம்முடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை காலம் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் நீங்கள் விளையாட்டை விட்டோ காலத்தை விட்டோ வெளியே செல்லக்கூடாது. இது கடினமான காலகட்டம் தான். ஆனால் நான் இதிலிருந்து நிச்சயமாக மீண்டு வருவேன்” என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles