ஹர்திக் பாண்டியா 2.0.. நாட்டுக்காக விளையாடுறது வேற.. ஐபிஎல் கிரிக்கெட் வேற.. பயிற்சி போட்டியில் ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ்

இந்தியா, வங்காளதேச அணிகளுக்கிடையேயான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியிருக்கிறது. இதில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை முதல் பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொண்டது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 23 ரன்களில் வெளியேற, அதற்குப் பின்னர் களமிறங்கிய பண்ட் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பண்ட் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் என 52 ரன்கள் விளாசினார். அரை சதம் அடித்த நிலையில் அவர் அடுத்து வரும் வீரருக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ரிட்டையர்டு ஆகி வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கிய சிவம்தூபே இந்தப் போட்டியில் சற்று தடுமாறினார். இதனால் சீரான ரன் வேகத்தில் சென்று கொண்டிருந்த இந்திய அணியின் ஸ்ட்ரைக் ரேட் சற்று மந்தமானது.

- Advertisement -

பதினாறு பந்துகளை எதிர்கொண்டசிவம் தூபே 14 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் வெளியேற, அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான பாண்டியா இந்த ஐபிஎல்லில் மும்பை அணியின் மோசமான செயல்பாடு மற்றும் பாண்டியாவின் விவாகரத்து பிரச்சனை உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் களமிறங்கினாலும் பாண்டியா எதையும் குறித்து கவலை கொள்ளாமல் நாட்டுக்காக சிறப்பாக விளையாடினார் என்று தான் கூற வேண்டும்.

23 பந்துகளை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 40 ரன்கள் விளாசினார். அதுவும் குறிப்பாக 16வது ஓவரில் தன்வீர் இஸ்லாம் வீசிய முதல் மூன்று பந்துகளையும் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டார். இதன் மூலம் மந்தமான இந்திய அணியின் ஸ்கோர் ஆனது சீரான வேகத்தில் திரும்பவும் உயர்ந்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பாண்டியா விளையாடிய போது மிகவும் குறைந்த ரன்களிலேயே தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் இவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில் தற்போது இவரின் இந்த ஆட்டம் பாண்டியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும். மேலும் பந்துவீச்சிலும் அசத்திய பாண்டியா மூன்று ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரிசப் பண்ட்டை 3ம் வரிசையில் நாங்கள் இதற்காகத்தான் களம் இறக்கினோம்.. அமெரிக்க மைதானத்தில் எங்கள் இலக்கு இது ஒன்றுதான்.. ரோகித் சர்மா பேட்டி

இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியை வென்றிருக்கிறது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி பாண்டியாவிற்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles