கே.எல்.ராகுல் நல்லா ஆடுனாரு‍ அதுக்கு என்ன பண்றது.. கேப்டன் ரோஹித் வந்த பிறகு அவர் தான் ஒப்பனர்.. ராகுலை கீழே தள்ளுங்கள் – காரணத்தை விளக்கிய ஹர்பஜன் சிங்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்புக்கு மத்தியில் உள்ளது. முதல் டெஸ்ட்டில் கேப்டன் ரோஹித் ஷர்மா இல்லாமல் பும்ரா தலைமைத் தாங்கி அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

தன் இரண்டாவது குழந்தையின் பிறப்புக்குச் சென்றிருந்த ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்கிட் கேப்டனாக திரும்பியுள்ளார். அவரின் வருகையால் அணியில் பேட்டிங்கில் மாற்றங்கள் தேவை எனவும், வெற்றிப் பெற்ற அணியில் எந்த வித மாற்றமும் இருக்கக் கூடாது எனவும் வெவ்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் அணிக்காக துவக்கத்தில் நிலைத்து ஆடியது கே.எல்.ராகுல் தான். பின்னர் இரண்டாவது இன்னிங்சில் ராகுலும் ஜெய்ஸ்வாலும் இணைந்து 201 ரன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றிக்கு வித்திட்டினர்.

- Advertisement -

கே.எல்.ராகுலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தர இடம் கொடுக்காமல் அவரை மாற்றி மாற்றி ஆடச் சொல்வதால் அவரின் ஆட்டம் பாதிக்கிறது என்பது நன்கு தெரிகிறது. ரோஹித் இல்லாத பட்சத்தில் மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்து தன் திறனை நிரூபித்தார்.

தற்போது ரோஹித் திரும்பியுள்ளதால் ராகுல் எந்த இடத்துக்கு நகர்பார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” ரோஹித் ஷர்மா ஓப்பனிங் தவிர மற்ற இடத்தில் வருவார் என எனக்குத் தோன்றவில்லை. கே.எல்.ராகுல் தான் வழிவகுக்க வேண்டும். “

- Advertisement -

” ரோஹித் ஷர்மாவை பேட்டிங்கில் 6வது இடத்தில் வருவது அணிக்கு நன்மையாக இருக்காது. டாப் 4 தான் அணியின் தூண்கள். அதில் அணிக்கு பக்கபலமாக இருக்க ரோஹித் ஷர்மா மிக முக்கியமான ஒருவர். ” என ரோஹித் ஷர்மா பக்கம் நின்று ஹர்பஜன் பேசியுள்ளார்.

அடிலெய்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் படிக்கல்‍ இடத்தில் காயத்தில் இருந்து மீண்ட கில் ஆடுவார். துருவ் ஜூரலிக்கு பதிலாக வரும் ரோஹித் ஷர்மா தன் டெஸ்ட் கரியரைத் துவங்கியது போல நம்பர் 6ல் விகையாடுவாரா அல்ல கே.எல்.ராகுல் மீண்டும் தியாகம் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles