கவலைப்படாதீங்க இந்தவாட்டி மிஸ்ஸே ஆகாது.. வருகிறது டி20 உலகக்கோப்பை… தொடங்கும் தேதி, இடம் முழு விவரம்.!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்தது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 138 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

- Advertisement -

50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டாடப்பட்டாமல் இருந்து வந்த நிலையில், திடீரென 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அனைவரையும் மீண்டும் சென்று சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 45 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றதால், திருவிழாவை போல் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அடுத்த ஐசிசி தொடரில் இந்தியா நிச்சயம் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக ஐசிசி தரப்பில் 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தமாக 20 அணிகள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் மூலம் டி20 மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது.

- Advertisement -

அதேபோல் அமெரிக்காவில் ஐசிசி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது முதல்முறையாகும். அமெரிக்காவின் ஃபுளோரிடா, டாலஸ், நியூ யார்க் நகரங்களில் நடக்கவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் இருப்பதால், மொத்தமாக 4 குரூப்பாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 அணிகளை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

அதன்பின் டாப் 8 அணிகள் இரு குரூப்பாக பிரிக்கப்பட்டு, அந்த குரூப்பில் முதல் இரு இடங்களை இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றில் மோதும். கடைசியாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 சுற்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles