இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணல.. இந்த இந்திய வீரர் தேவையா.? சுனில் கவாஸ்கரின் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடரில் நாளை இங்கிலாந்து அணியை அரை இறுதி போட்டியில் மோத உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்க வேண்டும் என்று விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்கு இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இந்த டி20உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த நிலையில் நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரில் இதே போல் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது.

- Advertisement -

அந்த தோல்விக்கு தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜடேஜா மொத்தமாக 10 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். மேலும் பேட்டிங்கில் மூன்று போட்டிகளில் களமிறங்கி 16 ரன்கள் மட்டுமே குவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஜடேஜாவுக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்க வேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஜடேஜாவின் தேவை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து கவாஸ்கர் கூறும் பொழுது ” ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஃபார்ம் குறித்து யாரும் கவலை கொள்ள தேவையில்லை. ஏனென்றால் ஜடேஜாவிடம் மிகச் சிறந்த அனுபவம் இருக்கிறது. மேலும் மற்ற அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் ஜடேஜா வெளியே தெரியாமல் இருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் அவருக்கு கிடைத்துள்ள சின்ன சின்ன வாய்ப்புகளிலும் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக ஃபீல்டிங்கில் 30 முதல் 40 ரன்கள் வரை தடுத்திருக்கிறார் என்பதை யாரும் மறக்க கூடாது. அவரது பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன், ரன் அவுட் போன்றவற்றை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அவர் பீல்டிங் மூலமாகவே 30 ரன்கள் வரை தடுக்க முடியும் சூழலில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் ஜடேஜாவின் இடம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இவர் ஒருத்தர் போதுங்க.. 2011ல யுவராஜ் எப்படியோ இப்போ இவரு அதே மாதிரி இருக்காரு- கூறுகிறார் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அல்லது ஆப்கானிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் சந்திக்க நேரிடும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles