பந்தை சேதப்படுத்துகிறாரா அர்ஸ்தீப் சிங்.? எப்படி 15வது ஓவர்ல கூட இவருக்கு இப்படி ஆகுது- இன்சமாம் கேள்வி

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக அரை இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது.

- Advertisement -

இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல்ஹக் இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் குறித்து சில சர்ச்சை கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

எப்போதுமே பேட்டிங்கில் மிக பலம் வாய்ந்ததாக கருதப்படும் இந்திய அணி இந்த முறை பந்து வீச்சிலும் கலக்கி வருகிறது அதிலும் குறிப்பாக வேகப்பந்துவீச்சில் முக்கிய துறுப்பு சீட்டு பந்துவீச்சாளர் ஆன பும்ராவுடன் அர்ஸ்தீப் சிங் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியதால் இந்திய டி20 அணியிலும் இடம் பெற்றார்.

- Advertisement -

இந்த நிலையில் இதுவரை நடந்துள்ள போட்டிகளோடு சேர்த்து அர்ஸ்தீப் சிங் மொத்தமாக 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இந்திய அணி தரப்பில் முதலிடத்தில் உள்ளார். தேவையான நேரத்தில் சிக்கனமாக பந்து வீசுவது உடன் குறிப்பாக விக்கெட்களையும் வீழ்த்திக் கொடுக்கிறார். இனி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தர முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பழைய பந்தில் உருவாகும் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி மிடில் ஓவர்களில் அர்ஸ்தீப் சிங்க்கு மட்டும் மிடில் ஓவர்களிலும் ஸ்விங்க் ஆகிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல்ஹக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து இன்சமாம் விரிவாக கூறும்பொழுது “இந்திய வீரர் அஸ்தீப் சிங் 16-வது ஓவரை வீசும் போது கூட அவருக்கு பந்து நன்றாக ஸ்விங்க் ஆகிறது. புதிய பந்தில் அவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகுமா? என்றால் புரியவில்லை.

- Advertisement -

போட்டியின் 12 அல்லது 13 வது ஓவரில் பந்து வீசும் போது கூட அவருக்கு பந்து நன்றாக ரிவர்ஸில் ஸ்விங் ஆகிறது. எனவே இதற்கு அவர் என்ன செய்கிறார் என்பதை நடுவர்கள் கவனிக்க தங்களது கண்களை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். இதுவே பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் செய்திருந்தால் இது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் என்ன என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் பதினைந்தாவது ஓவரில் கூட அர்ஸ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் செய்தால் அதில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது.

இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தும்.. ஆனா இந்த ஒரு விஷயம் இங்கிலாந்துக்கு சாதகமா இருக்கணும்- நாசர் ஹுசைன் எச்சரிக்கை

தன்னுடைய பந்து வீச்சு ஆக்சன் காரணமாக பும்ரா அதை செய்ய முடியும். மேலும் சில பந்துவீச்சாளர்கள் வேகம் மற்றும் ஆக்சன் போன்ற காரணங்களினால் அவ்வாறு அதனை செய்ய முடியும். ஆனால் இது போன்ற பந்துவீச்சை கண்காணிக்க வேண்டும்” என்று இன்சமாம் கூறி இருக்கிறார். அவர் கூற வருவது என்னவெனில் அர்ஸ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் செய்வதற்கு ஏமாற்று வேலை செய்வது போல தோன்றுகிறது என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles