கேப்டனா ஹர்மன்பிரீத் கவுரை சீக்கிரம் தூக்குங்க.. மந்தனா வேண்டாம்.. இந்த இளம் வீரங்கையை கேப்டன் ஆக்குங்க – மித்தாலி ராஜ் அறிவுரை

துபாயில் நடந்துக் கொண்டிருக்கும் மகளிர் டி20ஐ உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. இந்திய மகளிர் அணி போராடி நூழிலையில் தகுதி பெறத் தவறி குரூப் சுற்றுடன் வெளியேறினர். இது குறித்துப் பேசிய முன்னாள் மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ், இந்திய அணி புதிய கேப்டனுக்கு நகர வேண்டும் என அறிவுரை செய்துள்ளார்.

- Advertisement -

இந்திய மகளிர் அணி குரூப் சுற்றின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியுடன் தோல்வியைத் தழுவியதால் மிச்சம் இருக்கும் 3 போட்டிகளிலும் வென்றே தீர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. அண்டை நாடுகளான இலங்கை & பாகிஸ்தானை சுலபமாக வென்று நல்ல ஃபார்மில் இருந்தது.

- Advertisement -

கடைசி முக்கிய லீக் போட்டியில் சவாலான ஆஸ்திரேலியா அணியிடம் போராடி தோற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி இதுவரை 4 டி20ஐ உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளனர். கடந்த மூன்று தொடர்களில் குறைந்தது அரை இறுதி வரை தகுதி பெற்று வந்த அணி இம்முறை மோசமாக ரூப் சுற்றுடன் நடையைக் கட்டியுள்ளனர்.

- Advertisement -

இந்திய மகளிர் அணியின் இந்த வெளியேற்றம் பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பெற்றுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் காலம் முடிவடைந்தது விட்டதாக முன்னாள் இந்திய மகளிர் வீராங்கனையான மித்தாலி ராஜ் நினைக்கிறார். பிசிசிஐ விரைவில் இதன் முடிவை எடுப்பதைப் பற்றியும் வருங்கால இந்திய அணியைப் பற்றி அவர் விவரித்து பேசியுள்ளார்.

மித்தாலி ராஜ் கூறியதாவது, ” எல்லாமே பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் கையில் தான் உள்ளது. கேப்டன் மாற்றத்தை அவர்கள் விரும்பினால் உடனே செய்வது நல்லது. ஏனென்றால் அடுத்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கவுள்ளது. அதற்கு அருகாமையில் புதிய கேப்டனை தேர்வு செய்வது சரிவராது. அதனால் கேப்டனை மாற்றினால் இப்போதே செய்தால் தான் உண்டு. “

- Advertisement -

” இந்தியாவின் நடப்பு துணைக் கேப்டனாக ஸ்ம்ரித்தி மந்தனா இருக்கிறார். அவரை பிசிசிஐ கருத்தில் கொள்ளலாம் ஆனால் என்னைக் கேட்டால் வெகு ஆண்டுகள் கேப்டனாக நிலைத்து ஆட இளம் வீராங்கனை பக்கம் செல்லலாம் எனக் கூறுவேன். களத்தில் புத்துணர்ச்சியோடு செயல்படும் 24 வயது ஜெமிமா சரியான தேர்வாக இருப்பார். ” என தான் ஐடியாவை கொடுத்துள்ளார் மித்தாலி ராஜ்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles