இந்த தப்பை மட்டும் தயவு செய்து பண்ணவே பண்ணிராதீங்க.. ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள்

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், 100 சதங்கள் என இவர் கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை.

- Advertisement -

முதன்முதலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரரும் இவர்தான். அதற்குப் பிறகு வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா என பல்வேறு வீரர்கள் 200 ரன்கள் அடித்திருக்கிறார்கள். கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு ஒரே ஒரு குறையாக உலகக் கோப்பை மட்டும் வெல்லாமல் இருந்தது. ஆனால் அதையும் மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு வென்று அந்தக் குறையும் நிவர்த்தி செய்யப்பட்டது.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய காலம் முதல் மது மற்றும் புகை சம்பந்தமான எந்த ஒரு விளம்பரத்திலும் அடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தார். நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கும் பட்சத்தில் தன் ரசிகர்களை நானே தவறான வழியில் ஊக்கப்படுத்த மாட்டேன் என்று அந்த ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார்.

சமீபத்தில் புகை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை கண்டுபிடித்தார். அதில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது
“நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது என்னுடைய தந்தை எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் புகைப்பிடிக்கவோ புகைபிடிப்பதை ஊக்குவிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

- Advertisement -

நான் அதன்படியே இன்று வரை வாழ்ந்து வருகிறேன். சிறந்த எதிர்காலத்திற்கு புகையிலைக்கு பதிலாக ஆரோக்கியத்தைத் தேர்ந்தெடுப்போம்” என்று பதிவிட்டு இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் சமூக வலைதளத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியா வங்காளதேசம் பயிற்சி போட்டி.. நியூயார்க் பிட்ச் புதிய ஆடுகளம்.. இந்திய அணிக்கு சாதகமா?. முழு விபரம்

தற்போது சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கிரிக்கெட்டில் பல வீரர்களும் புகையிலை மற்றும் மது சம்பந்தமான விளம்பரங்களில் நடித்தாலும் சச்சின் மட்டும் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த முடிவுக்கு பலரும் அப்போதே வரவேற்பு தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பெரிய ஜாம்பவான்கள் கூறும் கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடையும் என்பதால் சமூக நலவாதிகளும் இதுபோல மற்ற நட்சத்திரங்களும் சச்சின் போல நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles