கம்பீர் அப்படி பண்ணினது எனக்கே ஷாக்கா இருந்தது.. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை.. தினேஷ் கார்த்திக் கூறும் ரகசியம்

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த வாரம் திங்கட்கிழமையோடு முடிந்த நிலையில் இந்தியாவின் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

ஒரு பயிற்சியாளர் என்றால் அணி வீரர்களை உற்சாகப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் அணி வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை வாங்குவதே ஒரு பயிற்சியாளரின் இலக்காகும். அதுவே ஒரு சிறந்த பயிற்சியாளருக்கான இலக்கணமாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இவற்றிற்கு கவுதம் கம்பீர் கொஞ்சம் கூட சரியாக வரமாட்டார் என்பது போல தினேஷ் கார்த்திக் சமீபத்தில் பேசிய ஒரு வீடியோ மிகவும் வைரலாக இணையதளத்தில் வலம் வருகிறது. பொதுவாக அணி வீரர்கள் பயிற்சி செய்யும் போது சோம்பேறித்தனமாக இருந்தால் பயிற்சியாளர்கள்தான் அவரை ஊக்கப்படுத்தி பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.

- Advertisement -

ஆனால் ஒரு பயிற்சியாளரே சோம்பேறித்தனமாக இருந்தால் என்ன செய்ய முடியும் என்பது போல தான் தினேஷ் கார்த்திக் கௌதம் கம்பீர் குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அதில் தினேஷ் கார்த்திக் நான் கௌதம் கம்பீர வேண்டும் என்றே அப்படி கூறவில்லை. என் மனதில் பட்ட ஒரு விஷயத்தை சொல்லி ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் கூறினேன்.

கௌதம் கம்பீர் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியிருந்ததாவது
“நான் பார்த்த வீரர்களிலேயே மிகவும் சோம்பேறித்தனமான வீரர் என்றால் கௌதம் கம்பீர்தான். அவர் எந்த வேலையும் செய்ய மாட்டார். மிகவும் சோம்பேறித்தனமான ஒரு வீரர். இதற்கு நான் உதாரணம் சொல்லியாக வேண்டும். அப்போது நாங்கள் எங்கள் சிறிய வயதில் இந்திய ஏ அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தோம்.

- Advertisement -

அப்போது ஹோட்டலில் எங்களுக்கு ஒரு தனி ரூம் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். கம்பீர் மற்றொரு ரூமில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். நான் அந்த வழியே செல்லும்போது என்னை அழைத்தார். நான் ஏதோ முக்கியமான விஷயம் என்னிடம் சொல்ல போகிறார் என்று அவரிடம் சென்றேன். அப்போது அவருக்கு பக்கத்தில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றுமாறு என்னிடம் கூறினார். நான் அதனை கேட்டு மிகவும் ஷாக் ஆனேன்.

இதையும் படிங்க:அந்த 16 வயது கார்த்திக் பாண்டியா தந்த ஊக்கம்தான் என்னை பிரச்சினையில் இருந்து வெளியே வர உதவியிருக்கிறது.. ஹர்திக் பாண்டியா பேட்டி

ஏனென்றால் அவர் இருக்கும் இடத்தை விட்டு இரண்டு அடி நகர்ந்தாலே டிவி ரிமோட் உள்ளது. ஆனால் அவர் அதை செய்யாமல் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்த என்னை அழைத்து டிவி சேனலை மாற்ற சொன்னார். இதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு விளையாட்டுத் துறையில் இருக்கும் ஒரு பிரபலமான வீரர் எப்படி இவ்வளவு சோம்பேறித்தனமாக இருக்க முடியும் என்று நான் நினைத்தேன்” என்று கூறி இருக்கிறார். கம்பீர் பயிற்சியாளராக வர இருக்கும் சூழலில் தினேஷ் கார்த்திக் கம்பீர் குறித்து இப்படி ஒரு செய்தியை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles