ஆட்டநாயகன் விருது கோலிக்கு அல்ல.. இவருக்கு போயிருக்கணும்.. ஆனா இந்தியா தோத்துருந்தா காரணம் கோலிதான்- மஞ்ச்ரேக்கர் கருத்து

இந்திய அணி தற்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மூழ்கி இருப்பதற்கு காரணம் டி20 உலக கோப்பையில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்களில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு கொடுத்திருக்கக் கூடாது எனவும், இந்திய அணி தோல்வி பெற்று இருந்தால் அதற்கு கோலிதான் காரணமாக இருந்திருப்பார் எனவும் சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் தொடக்க ஆட்டம் முதல் அரை இறுதிப் போட்டி வரை ஏழு ஆட்டங்களில் விளையாடி வெறும் 75 ரன்கள் மட்டும் குவித்திருந்த விராட் கோலி, இறுதிப் போட்டியில் களமிறங்கி 76 ரன்கள் குறித்து இந்திய அணி 176 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அப்படியே குறைவானது.

- Advertisement -

59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து 128 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடினார். இருப்பினும் தென்னாபிரிக்க அணி இந்த இலக்கை எட்டிப்பிடித்து வெற்றிக்கு அருகில் வந்த போதிலும் பந்து வீச்சாளர்களின் அபார திறமையினால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சுமார் 11 வருட ஏக்கத்திற்கு விடை கொடுத்தது. இந்த சூழ்நிலையில் ஆட்டநாயகன் விருது பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பும்ராவுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “விராட் கோலி அதிகமான பந்துகளை எதிர்கொண்டு விளையாடியதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இறுதியில் இரண்டு பந்துகளை மட்டும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. முதலில் இந்தியாவின் பேட்டிங் நன்றாக இருந்ததாகவே நான் உணர்ந்தேன். ஆனால் விராட் கோலியின் இன்னிங்ஸ் இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சாளர்கள்தான் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா வந்தது.

- Advertisement -

அந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு 90 சதவீதம் வெற்றி வாய்ப்பு இருந்தது. இந்தியா தோல்வி நிலையில் மட்டுமே இருந்தது. அந்த சூழ்நிலையில் பந்துவீச்சு மட்டுமே தான் இந்தியாவை காப்பாற்றியது. 128 ஸ்ட்ரைக் கேட்டில் விராட் கோலி கிட்டத்தட்ட போட்டியின் பாதி இன்னிங்ஸ் வரை விளையாடினார். இதனால் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:சூரியகுமார் பிடிச்சது கேட்ச் இல்ல.. பௌண்டரி லைன் தள்ளி வைத்து ஏமாத்திட்டாங்க.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பொல்லாக்

என்னைக் கேட்டால் எனது ஆட்டநாயகனாக ஒரு பந்துவீச்சாளர் தான் இருந்திருப்பார். அவர்கள் தான் இந்தியாவுக்கு முக்கியமான நேரத்தில் தோல்வியில் இருந்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்” என்று கூறி இருக்கிறார். இவரது கருத்துக்கு தற்போது பதிலடி கொடுத்து வரும் ரசிகர்கள், விராட் கோலி இறுதிப் போட்டியின் முதல் ஓவரில் 12 ரன்கள் விளாசி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்தார் எனவும், அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகள் விழுந்த காரணத்தால்தான் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles