அடிச்சு சொல்றேன்.. இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தும்.. ஆனா இந்த ஒரு விஷயம் இங்கிலாந்துக்கு சாதகமா இருக்கணும்- நாசர் ஹுசைன் எச்சரிக்கை

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக இரு அணிகளுமே தயாராகி வரும் நிலையில், முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் இந்த முறையும் இந்தியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தும். ஆனால் ஒரே ஒரு விஷயம் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்தத் தொடரிலும் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது இந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்த இரண்டு அணிகளுமே மீண்டும் அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் மோத உள்ளது.

- Advertisement -

ஆனால் அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணியின் சுமாரான பந்துவீச்சு. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும் போது இந்திய அணியின் மிக முக்கியமான பலமே அதன் பந்துவீச்சு தான். பும்ரா மற்றும் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல முறையில் பார்மில் இருக்கிறார்கள். இதனால் இந்த முறை இந்திய அணி இங்கிலாந்தை நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் இந்த முறையும் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தும் என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “இந்த டி20 உலக கோப்பை பைனலில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் என்று நம்புகிறேன். கடந்த முறை இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது போல் இந்த முறையும் அது நடக்கும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

ஆடுகளம் மெதுவாக இல்லாதவரை இங்கிலாந்து அணி இந்தியாவை கண்டு பயப்பட வேண்டியதில்லை. அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் மெதுவாக இருந்தபோது கூட பட்லர் மற்றும் சால்ட் ஆகியோர் அமெரிக்க வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். ஆனால் இந்திய அணிக்கு எதிராக அவர்களது பேட்டிங் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும் போது அவர்களது பேட்டிங் திறன் பாதிக்கப்படலாம்” என்று கூறி இருக்கிறார்

இதையும் படிங்க:நான் நம்புறேன்.. எங்க டீமுக்கு எதிரா ரோஹித் ஆட மாட்டார்னு.. காரணம் இதுதான்- இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேட்டி

மேலும் மற்றொரு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறும் பொழுது “இந்திய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தும் என்ற நாசர் உசேன் கருதுகிறார். எனக்கும் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா சவால் அளிக்கக்கூடிய அணி என்பதால் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளே விளையாடும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles