அநியாயம்.. ஆப்கான் தோற்க முழு காரணம் இந்தியாதான்.. வாகன் பகிரங்க குற்றச்சாட்டு

இன்று நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு இந்திய அணியும் ஒரு வகையில் காரணமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்திய அணி ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் இந்திய அணி விளையாடும் போட்டிகளை காலையில் நடத்தி வந்தது.

- Advertisement -

அதாவது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டிகள் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் கயானாவில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 27 ஆம் தேதி காலை இந்திய அணி விளையாடினால் தான் இங்கு இரவு ஒளிபரப்பப்படும். ஆனால் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடியதற்கு பதிலாக இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடிய போட்டி 26 ஆம் தேதி இரவு நடைபெற்றால் இன்று அதிகாலை போட்டியை பார்க்க நேரிடும்.

இதனால் ஒளிபரப்பு சேனல்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளதை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டி பேசி இருக்கிறார். இது குறித்து வாகன் விரிவாக கூறும்பொழுது “நிச்சயமாக தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி கயானா மைதானத்தில்தான் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்த ஒட்டு மொத்த டி20 உலக கோப்பை இந்திய அணியை மையமாக வைத்து நடத்தப்படுவதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.

- Advertisement -

திங்கட்கிழமை இரவு செயின்ட் வின்சென்டில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுகிறது. அங்கிருந்து டிரிடினாட் செல்ல நான்கு மணி நேரம் தாமதம் ஆகிறது. இதனால் வீரர்களுக்கு பயிற்சி பெறவும், அங்குள்ள சூழ்நிலைகளை பழகவும் நிச்சயமாக போதிய நேரம் இருக்காது. வீரர்களுக்கு மரியாதை இல்லாத இந்த நிலையை பார்த்து நான் பயப்படுகிறேன்” என்று வாகன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.. ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. இன்னும் கடுமையாக உழைப்போம்- ரஷித் கான் பேட்டி

இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வியில் இந்திய அணிக்கும் பங்குள்ளதாகவே இவரது கருத்து தெரிகிறது. இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை கயானா மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles