இந்த 2 விஷயத்துல இந்திய பலமா இருக்காங்க.. அதனால ஜெயிக்கிறது எங்களுக்கு அவ்வளவு ஈசியா இருக்காது- பால் காலிங்வுட் பேட்டி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று கயானாவில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பால் காலிங்வுட் இந்த முறை இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று அதற்கான சில காரணங்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இந்தியாவை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அதுபோலவே தற்போது மீண்டும் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று மோத உள்ளன.

- Advertisement -

குறிப்பாக கடந்த டி20 உலக கோப்பையில் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் மிக வலுவாகவே காணப்படுகிறது. இதனால் இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பால் காலிங்வுட் இந்திய அணியின் அணுகுமுறை குறித்தும் குறிப்பாக பும்ரா குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை போல் இந்த முறை நிச்சயமாக இருக்காது. இந்த முறை இந்திய அணி அசாதாரண அணியாக விளங்குகிறது.

- Advertisement -

நாங்கள் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் சாதாரண ஆட்ட அணுகு முறையை வைத்து வீழ்த்துவது கடினம். கடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் தற்போது அவரிடம் உலகத் தரமான பந்துவீச்சாளர் பும்ரா இருக்கிறார். 120 பந்து கொண்ட போட்டியில் 24 பந்துகள் அவர் கைகளில் இருக்கிறது. எதிரணியினருக்கு அவர் அவ்வளவு எளிதாக ரன்களை விட்டுத் தர மாட்டார்.

இதையும் படிங்க:கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ண வேணாமா.. சும்மா பந்து எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்- பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

மேலும் தற்போது இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறையும் மாறி இருக்கிறது. அதாவது முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்னர் இறுதியில் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை அவர்கள் கைவிட்டு விட்டனர். தற்போது தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடும் முறைக்கு மாறியிருக்கின்றனர். பேட்டிங் செய்ய ஆடுகளம் ஏதுவாக இருந்தால் மட்டுமே இங்கிலாந்து அணி கொஞ்சம் முன்னணியில் இருக்கும்.
ஆனால் பந்து கொஞ்சம் திரும்பினால் அது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக முடியும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles