தமிழ் நாட்டின் பெருமை, இந்திய கிரிக்கெட்டின் லெஜன்ட்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஷ்வின் அண்மையில் ஆஸ்திரேலிய சீரிஸின் மத்தியில் திடீரென தன் ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள், வல்லுனர்கள் என கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. போட்டியின் கடைசி நாளில் ரவிச்சந்திரன் அஷ்வின் தன் ஓய்வை அறிவித்தார். இவ்வாறு ஒரு தொடரின் நடுவில் திடீரென ஓய்வை அறிவித்தது பாராட்டத்தக்கது அல்ல என கவாஸ்கர், கபில் தேவ் போன்ற பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி தெரவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தன்னை தேர்வு செய்தால் அனைத்துப் போட்டியிலும் விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அஷ்வின் பிசிசிஐயிடம் வைத்திருந்தார். தேர்வுக் குழுவும் அதற்கு ஒப்புக் கொண்டு, பின்னர் வார்த்தைகளை தக்க வைக்கவில்லை. இதனால் அஷ்வின் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அஷ்வினின் இந்த திடீர் ஓய்வுக்கு முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, ” எனக்கு பெரிய அதிர்ச்சி. அஸ்வினை இந்திய அணி சரியாக நடத்தவில்லை. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் விளையாட, அஷ்வின் வெளியே அமர்ந்த போதே அஷ்வின் ஓய்வை பற்றி யோசித்ததாக ரோஹித் கூறினார். அதில் தெளிவாக தெரிகிறது பாருங்கள் அஸ்வினின் ஏமாற்றம். “
” தமிழ் நாட்டில் இருந்து உருவாகும் கிரிக்கட்டர்களுக்கு அஸ்வினின் சாதனை மிகப் பெரிய விஷயம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் அதனைத் தாண்டி அஷ்வின் 500+ விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வினை ஒதுக்க பல முயற்சிகள் நடந்த போதிலும் அவர் அவற்றைத் தாண்டி வந்துள்ளார்.
மேலும், தமிழக்தில் இருந்து வந்ததால் தான் அஸ்வினை இந்திய அணி சரியாக நடத்தவில்லை என சுப்ரமணியம் பத்ரிநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

