ரோகித் சர்மா ஃபார்ம் அவுட்னு எவ்வளவு பேசினாங்க.. ஒரே ஒரு இன்னிங்ஸ்தான்.. என்ன ஆச்சுன்னு பாருங்க- கில்கிறிஸ்ட் பாராட்டு

கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக பேசப்படுவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரில் ரோஹித் விளாசிய 92 ரன்கள்தான். எந்த பந்துவீச்சாளரையும் விட்டு வைக்காமல் அவர் ஆடிய அதிரடி ஆட்டம் அவர் இழந்த பார்மை அப்படியே மீட்டு வந்தது.

- Advertisement -

இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் ரோகித் சர்மாவை பாராட்டி பேசி இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஓரளவு சுமாரான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா அந்த ஒரே ஒரு போட்டியின் மூலம் தன் மீது வைத்த அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் அவரது இந்த அதிரடி ஆட்டம் சரியான நேரத்தில் அவரை திரும்பவும் பார்முக்கு கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் இனி வரப் போகிற இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கும் மிக முக்கிய போட்டிகளாக இருக்கிறது. இதனால் தொடக்க ஆட்டக்காரர் மீண்டும் பார்முக்கு வந்திருப்பது அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் விராட் கோலி ஃபார்ம் அவுட் கூட அது இந்தி அணியை பெரிதாக பாதித்ததாக தெரியவில்லை. மேலும் இனி வரப் போகிற அடுத்த இரண்டு போட்டிகளில் விராட் கோலியும் பேட்டிங் ஃபார்ம்க்கு வந்து விடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மேலும் தற்போது அரையிறுதிக்கு முன்பாக இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிக வலுவான அணியாகவே விளங்குகிறது. இதனால் அடுத்து வருகிற போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை இந்த முறை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் ரோஹித் சர்மாவின் அந்த ஒரு இன்னிங்ஸ் குறித்து தனது முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “ரோஹித் சர்மா ஆஃப் தி ஃபீல்டு ஒரு செய்தியை கொடுத்துவிட்டு செல்கிறார். ஆன் தி ஃபீல்டு ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கான ஆட்டத்தை கொடுக்கிறார். மேலும் அவர் எங்கள் அணி இப்படித்தான் விளையாடும் என்ற ரீதியிலேயே அனைத்துப் போட்டிகளையும் எதிர்கொள்கிறார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அவரது தாக்கம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. ரோஹித் சர்மா இதற்கு முன்பாக ஐபிஎல் மற்றும் இந்த உலகக் கோப்பை தொடரின் சில போட்டிகளில் சுமாராக விளையாடினாலும், இந்த ஒரே போட்டியின் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் சர்மா மாஸ்தான்.. ஆனா அதைவிட இந்த 2 விஷயம் தான் இந்தியா ஜெயிக்க முக்கிய காரணம்- விளக்குகிறார் சச்சின்

அவருடைய ஷாட் செலக்சன்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. அது பந்து வீச்சாளர்களை என்ன செய்ய வைக்கிறது என்று பார்த்தோம். அணியின் கேப்டன்கள் அவ்வப்போது நாங்கள் முடிவுகளை பற்றி கவலைப்படுவதில்லை. நாங்கள் பிராசஸில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் ரோஹித் சர்மா அதற்கான முடிவை சிறப்பாக எடுக்கிறார். அவரின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி ஆட்டமிழப்பதால் அது இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு கேப்டனாக அணிக்கு என்ன தேவையோ அதை ரோஹித் சிறப்பாக கொடுக்கிறார். அணி வீரர்களுமே அவரை பின்தொடர்கிறார்கள்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles