ஸ்டார்க் இதனால்தான் ரோஹித்கிட்ட மாட்டிகிட்டாரு.. ஆஸ்திரேலியா இன்னொரு பெரிய தப்பு பண்ணிட்டாங்க- பிராட் ஹாக்பேட்டி

டி20 உலக கோப்பை சூப்பர் 8 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2023ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு இந்த இரண்டு விஷயங்கள்தான் முக்கிய காரணம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்சல் ஸ்டார்க். கடந்த ஐபிஎல் தொடர் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசி தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்தார். அதே உத்வேகத்தில் இந்த டி20 உலக கோப்பை தொடரை எதிர்கொண்டார். இதுவரை ஓரளவு நன்றாக பதிவு செய்ய ஸ்டார்க் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு எதிராக ஒரே ஒரு ஓவரில் 29 ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் ஸ்டார்க்கின் மிக மோசமான பந்துவீச்சாக அது அமைந்தது. அதற்கு முன்னர் எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஸ்டார்க்கை இந்த அளவு தண்டித்ததில்லை. ரோகித் சர்மா எந்த பந்துவீச்சாளருக்கும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் ஒரே மனநிலையோடு எதிர் கொண்டு அனைவரது பந்துவீச்சையும் அடித்து நொறுக்கினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு ஆஸ்திரேலியா செய்த இந்த இரண்டு தவறுகள்தான் மிக முக்கிய காரணமாக அமைந்தது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

இது குறித்து ஹாக் விரிவாக கூறும்பொழுது “ஆஸ்திரேலிய அணி இந்த போட்டிக்கு நன்றாக தயாராகவில்லை என்பது போல்தான் இருந்தது. ஸ்டார்க் அந்த போட்டியில் சரியான லைன் அண்ட் லெந்தை பிடிக்கவில்லை. ரோஹித் சர்மாவுக்கு எதிராக பந்து வீசும் போது அந்த தவறுகளைத்தான் செய்தார். இதுதான் அவருடைய கவலைக்குறிய விஷயங்களாக இருந்தது. ரோகித் சர்மா தனது விக்கெட் குறித்து கவலைப்படாமல் தைரியமாக வெளியேறி விளையாடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது ஸ்டார்க் ரோகித் சர்மா காற்றில் செல்லும் பந்தை பின்பற்றி அடிக்கிறாரா? அல்லது பந்து ஸ்விங்க் ஆகவில்லை என்று கூறி இருந்தாரா? என தெரியவில்லை. அப்போதே ஆஸ்திரேலியா நிறைய சிக்கலில் இருந்தது. ஆஸ்திரேலியா அணி இதில் இருந்து திரும்ப மீண்டு வரப் போவது போல் தெரியவில்லை. அவர்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் தேடாமல் எங்கு தப்பு நடந்தது என்பது குறித்து சிந்திக்கிறார்கள்.

இதையும் படிங்க:இதுல என்ன தப்பு இருக்கு.. தன் நாடு ஜெயிக்கணும்னு அப்படி பண்றான்- ஆதரவாக பேசும் ரவிச்சந்திரன் அஸ்வின்

மேலும் போட்டியில் ஹர்திக் பாண்டியா கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்ஸ் தவறவிட்டார். போட்டியில் இந்திய அணிக்கு இரண்டு ஓவர்கள் மீதம் இருந்தபோது தவறவிட்ட கேட்ச் வாய்ப்பு ஆட்டத்தில் முக்கிய திருப்பமுடியை ஏற்படுத்தி விட்டது என்றும் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் மூலம், மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா இந்த டி20 உலக கோப்பை தொடரை விட்டு வெளியேறியது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles