புது வரலாறு.. பெண்கள் கிரிக்கெட்டின் அதிவேக பந்து.. பெண்கள் ஐபிஎல்லில் வரலாற்று சாதனை

பெண்கள் கிரிக்கெட்டில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் அதிவேகமாக பந்து வீசி புதிய சாதனை படைத்திருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் லீக்கில் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பெண்கள் பிரிமியர் கிரிக்கெட் லீக்கின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் சீசன் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனின் பன்னிரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின.

- Advertisement -

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் கேப்டன் லேர்னிங் 53 ரன்களும், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெமிமா ரோட்டரிகுயூஸ் 33 பந்துகளில் எட்டு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதன்படி 193 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் குறிப்பிடத்தக்க இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் டெல்லி என் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சப்னிம் இஸ்மாயில் என்பவர் மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக பந்தை வீசி சாதனை படைத்தார். தனது மூன்றாவது மூவரை வீசிய அவர் டெல்லி அணியின் மெக்னானிங்கிற்கு தனது அதிவேக பந்தான 131 கிலோமீட்டர் வேகத்தில் வீசி சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன்னர் இவரே 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 128 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது அதிவேக பந்தாக இருந்தது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான இவர், இந்திய கிரிக்கெட் லீக்கில் தனது அதிவேக பந்தினை வீசி புதிய சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் 127 கிலோமீட்டர் வேகத்தில் இருமுறை வீசி இருக்கிறார்.

நான்காவது வெற்றி பெற்ற டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற மும்பை அணி இரண்டு தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles