நான் நம்புறேன்.. எங்க டீமுக்கு எதிரா ரோஹித் ஆட மாட்டார்னு.. காரணம் இதுதான்- இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேட்டி

நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து வீரரான மொயின் அலி இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. அதன் பிறகு தற்போது இந்த முறையும் நாளை நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டியில் இதே இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் ஏறக்குறைய தற்போது இங்கிலாந்து அணியிலும் இருக்கின்றனர். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சரிசமமாக விளங்கும் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 92 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவை எப்படி வீழ்த்துவது என்ற திட்டத்தினை இங்கிலாந்து அணி தீட்டி இருக்கும்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி வீரரான மொயின் அலி ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் சில நேரங்களில் அப்படி உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களாகவே தங்களது விக்கெட்டை கொடுப்பார்கள் என்ற நம்ப வேண்டும். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை இப்படித்தான் அவ்வப்போது நடக்கும்.

- Advertisement -

எல்லா நேரங்களிலும் ரன்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் இந்திய அணியில் வேறு சில சிறந்த வீரர்களும் இருக்கின்றனர் என்பதையும் உணர வேண்டும். இந்தியா ஒரு புத்திசாலித்தனமான மிகச்சிறந்த அணி. அவர்களிடம் தேவையான அனைத்தும் இருக்கிறது. எனவே நாங்கள் அவர்களை விட அதிகமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். கடந்த முறை அவர்களை நாங்கள் ஆஸ்திரேலியாவில் தோற்கடித்தோம் எனவே இந்த முறையும் வீழ்த்த அவர்களுக்கு எதிராக நாங்கள் நன்றாக செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க:ஒரு உலகக்கோப்பை மாதிரியா நடத்துறீங்க.. அநியாயம் பண்றீங்க ஐசிசி- விளாசும் ரவிச்சந்திரன் அஸ்வின்

2022ஆம் ஆண்டு போட்டியை பற்றி நினைவு கூறினால் நாங்கள் பேட்டிங்கில் சிறந்தவர்களாக விளங்கினோம். முதலில் நாங்கள் அந்த ஆட்டத்தை பந்து வீச்சால் எங்களது போட்டியை எங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். அது எங்களுக்கு மிகச் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்த மிகச் சிறந்த நாளாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles