ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகரமான கேப்டனாகத் தற்போது திகழ்ந்து வருபவர் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ். 2023ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான உலகத்தை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் அதே ஆண்டில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு முக்கிய வெற்றிகளை ஆஸ்திரேலியா அணிக்கு பெற்றுக் கொடுத்தவர்.
இவரை முதலில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக அறிவித்த போது ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி ஆஸ்திரேலியா அணியினை சிறப்பாக வழிநடத்த முடியும்? என்று கேள்வி எழுந்தது. ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு வெற்றிகரமான கேப்டன் மூலம் நான்கு முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியை ஒரு வேகப்பந்துவீச்சாளர் தனது கடின உழைப்பு மற்றும் தெளிவான திட்டங்களால் ஆஸ்திரேலியா அணியை வெற்றிகரமாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தற்போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கும் பேட் கம்மின்ஸ் அடுத்து நடைபெற இருக்கும் 20 ஓவர் டி20 உலக கோப்பைக்காகத் தன்னை தயார்படுத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பையை கம்மின்ஸ் வென்று கொடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்.
தற்போது ஓய்வில் இருந்து வரும் பேட் கம்மின்ஸ் இன்று உலகமே கொண்டாடும் காதலர் தினத்தைக் குறிப்பிடும் வகையில் தனது மனைவியான பெக்கி பாஸ்டனின் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவரைப் பாராட்டி சில வரிகளை எழுதி இருக்கிறார். அதில் “என் குழந்தைகளுக்கு நல்ல அம்மா, மனைவி மற்றும் என்னுடைய காதலிக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரது புகைப்படத்தை லைக் செய்துவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய ரசிகர் ஒருவர்
நான் ஒரு இந்தியன். உங்கள் மனைவியை காதலிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட மற்ற ரசிகர்கள் இது ஒரு கேவலமான செயல், இவ்வாறு கூறுவது நல்லதல்ல.! என்று தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர்.
அப்போது அந்த இந்திய ரசிகரின் கருத்தைக் கண்ட பேட் கம்மின்ஸ் மிகவும் நிதானமாக நான் நீங்கள் காதலிப்பதாக என் மனைவியிடம் தகவல் தெரிவித்து விடுகிறேன் என்று மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார். பேட் கம்மின்சின் கருத்தை கண்ட மற்ற ரசிகர்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், கிரிக்கெட்டில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வது இயல்பு.
அதனை ரசிகர்கள் இது போன்ற அவமரியாதையான கருத்துக்களை பதிவிடாமல் இருப்பது நல்லதாகும். தற்போது ஓய்வில் இருந்து வரும் கம்மின்ஸ் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஐபிஎல் அதற்கு அடுத்து உலகக்கோப்பை என அடுத்தடுத்து தொடர்களில் விளையாட இருக்கிறார்.

