இந்த 2 தந்திரத்தை மாற்றி மாற்றி பயன்படுத்தினால் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை சுலபமாக தூக்கலாம்.. புஜாரா அட்வைஸ் !

2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபி மிகவும் பரபரப்பாக 1-1 என்ற கணக்கில் தொடர்ந்து வருகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் நான்காவது போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற அடுத்தப் 2 போட்டி வெற்றிகள் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியம்.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் டிராவிஸ் ஹெட். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், டி20ஐ உலகக் கோப்பை, ஓடிஐ உலகக் கோப்பை என அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு இவர் ஒரு தலை வலியே. இதனைத் தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் தொடரிலும் அவர் தன் ஆதிக்கத்தைச் செலுத்த, இந்திய அணி செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

- Advertisement -

நடந்துக் கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட் 5 இன்னிங்சில் 81 சராசரியில் இதுவரை 409 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். எஞ்சி இருக்கும் 2 போட்டிகளில் இவரை அடக்கி இந்திய அணி முன்னிலைப் பெறுவது அவசியம். டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுப்பது குறித்து செத்தேஸ்வர் புஜாரா ஐடியா கொடுத்துள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” லைன் மிகவும் முக்கியம். மிடில் – ஆஃப் லைனில் தொடர்ந்து பந்துவீசுங்கள். நீங்கள் எந்தப் பக்கம் இருந்து பந்துவீசினாலும் மிடில் ஸ்டம்ப் ஆஃப்பாக மாறக் கூடாது. மிடில் – ஆஃப் லைனில் டிராவிஸ் ஹெட் தடுமாறுவது தெளிவாகத் தெரிகிறது. “

மேலும், ” அதோடு ஹெட்டுக்கு ஷார்ட் பந்துகளில் சிக்கல் உள்ளது. ஷார்ட் பந்துகளை ஒரு மாறுபாடாக பயன்படுத்தி சரியான பீல்டர்களை நிறுத்தி ஹெட்டை தடுமாற்றத்தில் தள்ளலாம். அதற்காக அனைத்துப் பந்துகளையும் ஷார்ட்டாக வீசிய வேண்டியத் தேவையில்லை. பெரும்பாலான பந்துகள் மிடில் – ஆஃப் லைனில் வீச இடையில் ஷார்ட் பந்துகளைப் போட்டால், ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்துவதில் வெற்றிச் சதவீதம் அதிகரிக்கும். ” என்றார் புஜாரா.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles