டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சம்பளம் உயர்வு.. மூன்று மடங்காக உயர்த்தி ஆச்சர்யம் அளித்த பிசிசிஐ.. முழு விபரம் இதோ

டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான சம்பளத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. இது டெஸ்ட் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜெய்ஷா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய வருடங்களில் டி20 கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான மோகம் நாளுக்கு நாள் இளைஞர்களிடையே குறைந்து வருகிறது. வளர்ந்து வரும் இளைஞர்கள் ஐபிஎல் அல்லது வேறு ஏதேனும் டி20 தொடரில் இடம் பெற்றாலே தனது வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டதாகக் கருதுகின்றனர்.

- Advertisement -

காரணம் டி20 கிரிக்கெட்டில் பங்குபெறும் ஒவ்வொரு அணிகளும் தனக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கும். இதனால் டி20 கிரிக்கெட் மீதான மோகம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக இந்திய கிரிக்கெட் வீரர்களான இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்துவிட்டு ஐபிஎல் தொடருக்காகத் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதனை அறிந்த பிசிசிஐ அவர்களது சம்பள காண்ட்ராக்ட்டை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை கலையும் நோக்கில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தினை வளர்க்கும் வகையில், வீரர்களுக்கான சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது பிசிசிஐ. அதாவது ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் சம்பளமாக நிர்ணயித்த பிசிசிஐ தற்போது ஒரு சீசனில் 9 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது என்றால் அதில் 50 சதவீத போட்டிக்கு குறைவாக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படாது.

எடுத்துக்காட்டாக 9 போட்டிகளில் நான்கு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட மாட்டாது. ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்தால் ஊக்கத் தொகையாக 30 லட்சம் வழங்கப்படும். தவறுதலாக அவரது பெயர் பிளேயிங் லெவனில் இல்லை என்றால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் சம்பளமாக 15 லட்சம் மட்டுமே வழங்கப்படும்.

- Advertisement -

75 சதவீத போட்டிகளுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு 45 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதுவும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிளேயிங் லெவலில் இடம் பிடிக்கவில்லை என்றால் சம்பளம் மட்டுமே வழங்கப்படும். ஊக்கத்தொகை வழங்கப்படாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த அறிக்கை வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில், இது ரசிகர்களிடையே அதிக அளவு பாராட்டைப் பெற்று வருகிறது. இது டி20 போட்டிகளில் இடம் பிடிக்காமல் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வரும் வீரர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் எதிர்காலத்திலும் வளரும் இளைஞர்களிடையே டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை தூண்டும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles