பந்தை வாங்க மறுத்த விவகாரம்.. அஸ்வின் சொன்னது இதுதான்.. வெளியிட்ட குல்தீப் யாதவ்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய வார்த்தைகள் தனக்கு பெருமிதத்தை அளித்தன என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தரம்சாலாவில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் பண்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவிலியைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதற்கு இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு திறமையால் இங்கிலாந்து அணியை குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது. சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 15 ஓவர்கள் பந்துவீசி 72 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில், எஸ்.எஸ்.வி ஜெயிஸ்வால் 57 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 52 ரன்களிலும், கில் 26 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட் விழுந்தவுடன் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மரியாதை நிமித்தமாக தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினை நோக்கி தனது எஸ். ஜி பந்தினை வீசினார். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில் பந்தை அவரிடமே ஒப்படைத்தார்.

- Advertisement -

முதல் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் வர்ணனையாளர் குல்தீப் யாதவிடம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறீர்கள் பந்தை நீங்களே வைத்திருக்கலாமே என்று கேட்க, அதற்கு பதில் அளித்த குல்தீப் யாதவ் “ரவிச்சந்திரன் அஸ்வினும் இதையேதான் என்னிடம் சொன்னார்.நான் 35 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். எனவே இந்த பந்தை நீயே வைத்துக் கொள்” என்று அஸ்வின் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். மேலும் அஸ்வின் குறித்து கூறிய அவர்

“அஸ்வின் மிகவும் கனிவானவர் மற்றும் அடக்கமானவர். நூறாவது டெஸ்ட்டில் விளையாட அவர் மிகவும் தகுதியுடையவர். நான் ஏழு ஆண்டுகளாக சர்வதேச அணியில் இருந்து அவரின் ஏற்றத்தாழ்வுகளை பார்த்திருக்கிறேன். அவரின் சுய ஒழுக்கமும், கடின உழைப்பும் மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles