“அஸ்வின் மற்றும் லயன்கிட்ட இந்த விஷயத்துல தெளிவா இருக்கணும்”… இல்லன்னா கண்டிப்பா அவுட்தான்.. ரகசியத்தை உடைக்கும் ஜோ ரூட்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவானாக திகழும் ஜோ ரூட் சமீப காலமாக பேட்டிங்கில் ஃபார்ம் இன்றி தவித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அபார சதம் அடித்து மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி இருக்கும் வேளையில், சுழற் பந்து ஜாம்பவான்கள் அஸ்வின் மற்றும் நாதன் லயனுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னரின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. நாளின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர்களை வீசி முடித்தாலும், அந்த நாளின் மத்திய பகுதியில் சுழற் பந்துவீச்சின் தாக்கமே பெரிதும் மேலோங்கி இருக்கும். எப்போதும் சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களை புத்துணர்வாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை அணில் கும்ப்ளே, முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதிலும் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் என்பது அவ்வளவு சீக்கிரம் எளிதில் யாரும் எட்ட முடியாத சாதனையாகும். அந்த வரிசையில் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் மற்றும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த நாதன் லயனும் சுழல் ஜாம்பவான்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

2011ஆம் ஆண்டு ஒரு சேர டெஸ்ட் அணியில் அறிமுகமான இவர்கள் நாதன் லயன் 128 போட்டிகளில் விளையாடி 527 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 99 போட்டிகளில் விளையாடி 504 விக்கெடுகளையும் வீழ்த்தியுள்ளனர். சுழலுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் நாதன் லயன் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால், சூழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் தனது பல்வேறு பந்துவீச்சு யுக்தியைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது அஸ்வின் ஸ்டைல்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் இவர்கள் இருவருக்கும் இடையேயான பந்துவீச்சு வித்தியாசத்தைக் குறித்து சுவாரசியமாக கூறியிருக்கிறார். அதில் இவர் கூறியிருப்பதாவது

- Advertisement -

“ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் முதல் பந்தை போல அடுத்த பந்தினை வீச மாட்டார்.அவர் அடிக்கடி பேட்ஸ்மேன் நிற்கும் கிரீசின் பக்கத்தில் இழுத்துச் சென்று பேட்டில் எட்ஜ் கொடுக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்வார். அஸ்வின் பேட்ஸ்மேனை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதற்கான வழியைக் கண்டறிந்து விடுவார்.

இதில் நாதன் லயன் சற்று வித்தியாசமானவர். போட்டியின் முதலில் அவர் உங்களுக்கும், உங்களின் முழங்காலுக்கும் இடையே பந்து பவுன்ஸ் ஆகி பேட்டில் பட்டு லெக் ஸ்லிப்பில் நிற்கும் பீல்டருக்கு கேட்ச் கொடுத்து வெளியேற வைப்பார். பின்னர் தனது வேகத்தை குறைத்து கோட்டின் அருகே வீசும் போது நாமும் அதற்குத் தகுந்தவாறு விளையாட வேண்டும். இதற்கு மிச்சல் ஸ்டார்க் பிட்ச்சில் பந்து சுழல்வதற்கான அனைத்து சூழ்நிலையும் ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறார். எனவே இவர்கள் இருவருக்கு எதிராக மிகவும் தெளிவாக விளையாட வேண்டும் இல்லையேல் உங்களை விரைவில் ஆட்டமிழக்கச் செய்து விடுவார்கள்” என்று ஜோ ரூட் கூறுகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles