நேரடியாக இங்க வந்துட்றது.. முதலில் போய் உள்நாட்டு கிரிக்கெட் ஆடு.. கோலி ஸ்பின்னுக்குத் தடுமாறுவது பற்றிய காரணத்தை விளக்கியுள்ள அனில் கும்ப்ளே

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்ததை அடுத்து புனேவில் இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்பின் பிட்ச் அமைத்து தொடரை சமன் செய்யும் நோக்கில் இருந்த இந்திய அணி மீண்டும் மண்ணைக் கவ்வியது. தொடர்ந்து ஸ்பின்னுக்கு தடுமாறும் விராட் கோலி பற்றி அனில் கும்ப்ளே தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெவான் கான்வே & ரச்சின் ரவீந்திராவின் அரை சதத்தினால் 259 ரன்கள் சேர்த்து. இந்திய அணியின் சுழலில் சுலபமான சுருண்டுவிடுவர் என எதிர்பார்த்த அனைவரையும் முட்டாளாக்கினர். வெளிநாட்டு நியூசிலாந்து அணியே இந்த அளவு ஆடுகிறது என்றால் சொந்த மண்ணில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஓர் ஏமாற்றம்.

- Advertisement -

வெறும் 156 ரன்களுக்கு சான்ட்னரின் சுழலில் அடங்கியது. இந்த ஸ்கோரே ஜெய்சுவால், கில் மற்றும் ஜடேஜா ஓரளவு தாங்கிப் பிடித்து ரன்கள் சேர்த்தால் மட்டுமே. விராட் கோலி வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சான்ட்னர் வீசிய ஃபுல் டாஸ் பந்தில் ஸ்வீப் ஆடப் போய் க்ளீன் போல்டட்டானர்.

- Advertisement -

விராட் கோலி கடந்த 4 வருடங்களாக சுழல் பந்துவீச்சுக்கு பெரிதாக தடுமாறி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல சமீபத்தில் நடந்த இலங்கை ஓடிஐ தொடர், ஐ.பி.எல் என அனைத்து வகைக் கிரிக்கெட்டிலும் அவரது வீக்னெஸில் எதிரணி ஸ்பின்னர்கள் சரியாக அடித்து விக்கெட் எடுத்துக் கொள்கிறார்கள். 2021 முதல் ஆசியாவில் 26 இன்னிங்சில் 21 முறை ஸ்பின்னர்களுக்கு விக்கெட்டை தாரை வார்த்து கொடுத்துள்ளார் விராட் கோலி.

இது பற்றி அனில் கும்ப்ளே, ” விராட் கோலிக்கு வலைப் பயிற்சியை விட போட்டியில் விளையாடி கிடைக்கும் பயிற்சி பெரிதானது தான். ஆனால் என்னைக் கேட்டால் அவர் உள்நாட்டு ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி போன்றவற்றில் விளையாடி இருந்தால் அது நிச்சயம் பயனலித்தாக இருக்கும். ஆனால் அவர் இன்று இப்படி ஆட்டமிழந்ததற்கு காரணம் இது மட்டுமல்ல. “

- Advertisement -

” விராட் கோலி ஆட வரும் போது பெரும்பாலாக ஸ்பின் பிட்ச்கள் தான் தரப்பட்டுள்ளன. ஸ்பின்னர்களுக்கு அது சாதகமாக இருப்பதால் விராட் கோலிக்கு அது பெரிய சவாலாக மாறிவிடுகிறது. பிட்ச்க்கு ஸ்பின்ன்களுக்கு சாதகமாக இருப்பதால் கோலி, கில் என அனைவரும் பார்ட் டைம் ஸ்பின்னர்களைக் கூட கடினமாகப் பார்க்கிறார்கள். ” என்றார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles