சமீபத்தில் கேவலமாக தோற்ற பிறகும் புத்தி வரவில்லையா ? ஆஸ்திரேலியா தொடரில் மிக முக்கிய முடிவரை ரோஹித் & கம்பீர் தப்பா எடுக்குறாங்க – அனில் கும்ப்ளே அதிருப்தி

இந்தியா – ஆஸ்திரேலியா மோதிக் கொள்ள காத்திருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி வருகிற நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி திட்டமிட்டிருந்த ஓர் முக்கிய பயிற்சி ரத்து செய்ததை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வன்மையாக கண்டித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இந்திய அணி சொந்த மைதானத்தில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்யபட்டு பெரிய அவமானத்தில் இருக்கிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பு ஊசல் ஆடிக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5ல் 4 போட்டிகளில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலை நிலவியுள்ளது.

- Advertisement -

டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரு அணிகளின் ஜூனியர் வீரர்கள் கொண்ட அணிகள் மோதியது. ருத்துராஜ் கொய்க்வாட் தலைமையிலான இந்தியா-ஏ அணி ஆஸ்திரேலியா-ஏ அணியுடன் மோதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா சீனியர்கள் மற்றும் இந்தியா-ஏ இடையேயான ஓர் பயிற்சி ஆட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது பிசிசிஐ.

- Advertisement -

ஆனால் இதனை அண்மையில் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. இதனை அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்திய அணியின் இந்த முடிவு முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளேவுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளாதால் அவர் அதிருப்தியில் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

” ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா அணி திட்டமிட்டிருந்த பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது பெரிய ஆச்சர்யத்தை எனக்குக் கொடுத்துள்ளது. என்னால பல மணி நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டாலும், அது நேரடியாக ஒரு போட்டியில் விளையாடும் அளவுக்கு வராது. காரணம், போட்டியில் பந்துவீச்சாளர்களை சந்திப்பது மிகவும் வித்தியாசமானது. ” என்றார் அனில் கும்ப்ளே.

- Advertisement -

பயிற்சி ஆட்டத்தை இந்தியா ரத்து செய்ததற்கு காரணம், கடைசி நேரத்தில் துரதிஷ்டவசமாக எதேனும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக எனக் கூறியுள்ளது. மேலும் பயிற்சி ஆட்டத்தில் ஒரு வீரர் விரைவாக ஆட்டமிழந்தால் அவருக்கு அத்துடன் வெளியில் தான் அமர வேண்டும். அதே வலைப் பயிற்சி என்றால் 70 பந்துகளை வரை விளையாடும் வாய்ப்புக் கிடைப்பதால் இதனைத் தேர்ந்தெடுத்திருப்பதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles