தம்பி கிளம்பு.. நீ இன்னும் நிறைய கத்துக்கணும்.. கில்லை ஆக்ரோஷமாக வெளியேற்றிய ஆண்டர்சன்.. வீடியோ

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்த சுப்மான் கில்லை தனது மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் வெளியேற்றி தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார் ஆண்டர்சன்.

- Advertisement -

தரம்சாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிராவ்லியைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கிராவிலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்திய இந்திய அணியில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தை இந்திய அணி வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

- Advertisement -

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், கில்லும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா ஒரு முனையில் தனது அதிரடியை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன கில் இந்த இன்னிங்ஸ் பயன்படுத்தி தனது மிகச் சிறந்த பார்மை வெளிக்கொண்டு வந்தார்.

ஆட்டம் முழுக்கவே நிதானத்தை வெளிப்படுத்தி வந்தாலும், அவ்வப்போது தனக்கு ஏதுவான பந்துகளை அதிரடியாக விளையாடி பந்துகளை நாலா புறமும் சிதறடித்தார். இளம் வீரரான இவரை இங்கிலாந்து பந்து வீச்சினர் இவரின் விக்கெட்டை வீழ்த்த சற்று திணறித்தான் போயினர் என்று சொல்ல வேண்டும்.

- Advertisement -

150 பந்துகளில் 15 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என விலாசி 110 ரன்கள் குவித்த கில்லை, இங்கிலாந்து அணியின் மூத்த அனுபவ வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இவரது விக்கெட்டைக் காலி செய்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது ஓவரை வீசிய ஆன்சர்சனை கில் எதிர்கொண்டார்.

ஸ்டம்ப் லைனை நோக்கி ஆண்டர்சன் வீச, கில் சற்று சுதாரிப்பதற்குள் பந்து பின்னே சென்று ஸ்டம்புகளைத் தாக்கியது. தனது அனுபவத்திற்கு முன்னால் நீ இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல் கில்லின் விக்கட்டை வீழ்த்தியவுடன் ஆக்ரோஷமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இது இவரது 699 விக்கெட் ஆகவும் அமைந்துள்ளது. இந்த இன்னிங்ஸ்லேயே 700 விக்கெட்டை வீழ்த்தி வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எட்டு விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ள இந்திய அணி 255 ரன்கள் உடன் முன்னிலை வகிக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இந்திய அணியின் கையே தற்பொழுது ஓங்கி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles