இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.. ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. இன்னும் கடுமையாக உழைப்போம்- ரஷித் கான் பேட்டி

இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான அணியின் கேப்டன் ரஷீத்கான் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரரான குர்பாஸ் இந்த போட்டியில் ரன் ஏதுமின்றி மேக்ரோ ஜான்சனின் பந்துவீச்சில் வெளியேறினார். அதன் பிறகு பின்னால் வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற, ஆப்கானிஸ்தான் அணி 12 ஓவர்களிலேயே 10 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜான்சன் அவர்களின் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 ஓவர்களிலேயே 60 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் கூறும் பொழுது
“ஒரு அணியாக இந்த தோல்வி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் சரியாக எங்களுக்கு கண்டிஷன்கள் ஒத்துழைக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட் பொருத்தவரை அனைத்து கண்டிஷனுக்கும் சரியாக தயாராக வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் மிகவும் நன்றாக பந்து வீசியது.

- Advertisement -

இந்தத் தொடரில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அதுவும் குறிப்பாக வேகப்பந்துவீச்சு அருமையாக இருந்தது. முக்கியமான கட்டத்தில் முஜீபின் காயம் எங்களை சற்று பின்னோக்கி இழுத்தது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் முகமது நபி ஆகியோர் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார்கள். அதனால்தான் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் பணியை அது எளிதாக்கியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளோடு நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்.

இதையும் படிங்க:இந்த 2 விஷயத்துல இந்திய பலமா இருக்காங்க.. அதனால ஜெயிக்கிறது எங்களுக்கு அவ்வளவு ஈசியா இருக்காது- பால் காலிங்வுட் பேட்டி

இது எங்களுக்கு வெறும் ஆரம்பமாக மட்டுமே இருக்கும். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டு வருவோம். எங்களிடம் மிடில் ஆர்டர் பிரச்சனை இருக்கிறது. இனி வரும் காலங்களில் அதையும் சரி செய்ய வேண்டும். இந்தத் தொடர் எங்களுக்கு ஒரு நல்ல கற்றல் அனுபவத்தை கொடுத்தது. எங்களால் எந்த அணியும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும் தற்போது வந்திருக்கிறது. இந்தத் தொடரில் எங்களது பங்களிப்பு நாங்கள் செய்த உழைப்புக்கு பலனாகத்தான் பார்க்கிறோம். இனி அடுத்தடுத்து வரும் தொடர்களில் பேட்டிங்கிலும் முன்னேற்றம் காணுவோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles