வாய்ப்பே இல்லை.. நல்ல வர வேண்டிய வீரர் தான் ஆனால் இனிமே இந்திய அணிக்குள் இவர் வர வாய்ப்பு இல்லை – ஆகாஷ் சோப்ரா உறுதி

இந்திய – வங்கதேசம் இடையேயான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. இந்த அணியில் இடம் பிடிக்காத ஒரு சீனியர் வீரர், இனி மீண்டும் இந்திய அணியில் காணப்படுவதற்கு வாய்ப்பில்லை என கிரிக்கெட் வர்னையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டிக்கு இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சர்பராஸ், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப், யாஷ் தயால் உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இது தவிர கே.எல்.ராகுல், பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இது தவிர இன்னும் சில தகுதியான வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இதற்கு முந்தைய தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பிடிக்கவில்லை. இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது, ” கடந்த முறை வங்கதேச அணிக்கு எதிராக தோல்வியின் பிடியில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் ஷ்ரேயாஸ் ஐயர் தான். ஆனால் அதற்கு பின்பு அணியில் நிறைய மாறிவிட்டது. “

- Advertisement -

” இனிமேல் ஐயர் இந்திய அணியில் மீண்டும் காணப்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் சர்பராஸ் கான், துருவ் ஜூரல் ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். விக்கெட் கீப்பிங்கில் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளதாக கே.எல்.ராகுல் கூட அணியில் நிலைப்பார தெரியவில்லை. இத்தகு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் எவ்வாறு மீண்டும் அணிக்குள் வருவார் எனப் புரியவில்லை. ” என்றார் ஆகாஷ் சோப்ரா.

ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் காணப்பட்டார். பின்னர், அனைவரையும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டுமென பிசிசிஐ உத்தரவிட்டது. பணிச்ச்சுமையை கூட்டும் என்பதாலும் சிறிது ஓய்வு தேவைப்பட்டதாலும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதில் இருந்து விலகினர்.

- Advertisement -

அதனையடுத்து உடனடியாக பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது இருவரும் துலிப் தொடரில் விளையாடி வருகிறார்கள். இதில் ஐயர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை, ஆனால் மறுபக்கம் இஷான் கிஷன் அபார சதம் விளாசி கவனத்தை ஈர்த்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles