60 நாள் எந்த பயிற்சியும் இல்ல.. நேரா விளையாட தான் வந்தேன்.. அப்பதான் யுவராஜ் ஒரு விஷயம் சொன்னாரு- யூசுப் பதான் பேட்டி

ஓய்வு பெற்ற முன்னணி வீரர்கள் பங்கு பெற்ற உலக லெஜென்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய அணியின் யூசுப் பதான் தயாரான விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகின் முன்னணி மூத்த வீரர்கள் பங்கு பெற்ற உலக சாம்பியன்ஸ் லீக் 2024 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஆறு அணிகளில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் இந்தியா-ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மாலிக் 36 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 41 ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க, அதற்குப் பின்னர் சில விக்கெட்டுகள் விழுந்தாலும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய யூசுப் தான் பதினாறு பந்துகளில் ஒரு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 30 ரன்கள் குவித்த இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த சூழ்நிலையில் இந்தியா சாம்பியன்ஸ் அணி லெஜென்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றிக்குப் பின்னர் யூசுப் பதான் இந்தத் தொடர் குறித்து கூறும் பொழுது “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நான் தேர்தல் வேளையில் பிஸியாக இருந்தேன். இந்த காரணத்தால் என்னால் முழுமையாக பயிற்சி பெற முடியவில்லை.

- Advertisement -

தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்பு தான் கிரிக்கெட் விளையாடினேன். அப்போது அணியின் கேப்டன் யுவராஜ் சிங் அணியில் எனக்கு ஒரு முக்கிய பங்கு இருப்பதாக கூறினார் அதாவது ஆட்டத்தின் சூழ்நிலைக்கி ஏற்ப விளையாடும் படியும் தேவைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடும் படியும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே என்னாலும் சிறப்பாக செயல்பட முடிந்தது. எங்கள் குடும்பத்தினரின் முன்னிலையில் நாங்கள் வெற்றிகளும் தோல்விகளும் பெற்றிருக்கிறோம்.

இதையும் படிங்க:பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. முன்னாள் வீரர்கள் அசத்தல்.. லெஜெண்ட்ஸ் 2024 கோப்பையை கைப்பற்றிய விண்டேஜ் அணி

இது உண்மையாகவே ஒரு அற்புதமான தொடராக இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. எங்கள் அணி நிர்வாகம் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டது. பாகிஸ்தான் அணியும் சிறந்த அணி. அவர்கள் இதுவரை சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்த தொடர் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு எடுத்துச் செல்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles